நாட்டில் அமைதி கெட்டுப்போச்சு... அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்..!! எரிமலையாய் குமுறி வெடிக்கும் சட்டமன்ற உறுப்பினர்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 22, 2019, 3:58 PM IST
Highlights

 மாநில காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ்படையினர் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது நடத்தும்  துப்பாக்கி சூடுகள் காட்டுமிராண்டித்தனமானது என்றார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கும்,   கிளர்ச்சிக்கு பெறுப்பேற்று  உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனே பதவி விலக வேண்டும் என நாகை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.   மத்திய அரசின்  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம்  மற்றும்  தேசிய பதிவுச் சட்டம்  உள்ளிட்டவைகளை எதிர்த்து  திண்டுக்கல்லில் ஜமாத்துல் உலமா மற்றும் கூட்டமைப்பு சார்பில் கண்டன மாநாடு  நடைபெற்றது   அதில்  ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.  மத்திய அரசை கண்டித்தும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம்  எழுப்பினர். 

 

இடையே  போராட்டத்தில் பங்கேற்ற  ஐயப்ப பக்தர்களும் இச்சட்டத்தை கண்டித்து முழங்கினர் இந்தியா வேற்றுமையிலும்  ஒற்றுமை கொண்ட நாடு  என்பதை  அது உணர்த்துவதாக இருந்தது . இப்போராட்டத்தை இஸ்லாமியர்க்களுக்கு ஆதரவாக மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்துகொண்டு இப்புதிய சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென கண்டன குரல் எழுப்பினர்.  இதில்  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜம்மியத்துல் உலமா ஹிந்த்தின் தமிழக தலைவர் எம்.  மஹ்மூத் மன்சூர் காஸிபி   ஹஜ்ரத் , ஆகியோர்  மத்திய அரசு கொண்டுவந்துள்ள இச்சட்டத்தை மதம் மொழி கடந்து மக்கள் எதிர்ப்பதாக கூறினர்.   பின்னர் அதில் பேசிய நாகை சட்டமன்ற உறுப்பினரும்   மஜக பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி,  போராட்டத்தை  பொறுப்புணர்வுடன் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப் பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.  

மேடைகளில் பேசுபவர்கள் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்றார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் குறித்து விவரித்த அவர்,  மாநில காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ்படையினர் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது நடத்தும்  துப்பாக்கி சூடுகள் காட்டுமிராண்டித்தனமானது என்றார்.   நாட்டில் நிலவும்  அனைத்து அசாதாரண சூழலுக்கும் அமைதியின்மைக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனே தன் பதிவியை  ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்  அப்போது வலியுறுத்தினார்.

 

click me!