காணாமல் போன வைகோ, திருமா, விஜயகாந்த்... என்னைப் பார்த்து பயப்படும் திமுக... சீமானின் கூல் பேட்டி..!

Published : Sep 30, 2021, 08:51 PM IST
காணாமல் போன வைகோ, திருமா, விஜயகாந்த்... என்னைப் பார்த்து பயப்படும் திமுக... சீமானின் கூல் பேட்டி..!

சுருக்கம்

திமுகவினர் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் காலியாக உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய சீமான் இன்று வருகை புரிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “எங்களுக்கு முன்பு தேர்தலில் தனித்து போட்டியிட்ட வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் போன்றோர், வளர்ந்து வரும் நேரத்தில் கூட்டணி வைத்ததால் காணாமல் போய் விட்டனர். அதே போல நானும் செல்ல மாட்டேன். 
நாம் தமிழர் கட்சியின் பாதை தனித்துவமானது. இதனால்தான் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகள் தேர்தலில் காசு கொடுக்காமல் வெற்றி பெற முடியுமா? நாம் தமிழர் கட்சி மட்டுமே செயல்படுத்தப்படும் திட்டங்களை கூறி வெற்றி பெறும். திமுகவினர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கவில்லை. என்னை பார்த்து பயப்படுகிறார்கள். என் கட்சி தொண்டர்கள், அவரது குடும்பத்தினருக்கும் பெண் வேட்பாளர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். திமுகவின் 200 நாட்கள் ஆட்சியில் ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.” என்று சீமான் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!