என்னை தவறாக பேசுவது அவரவர் தாயை கொச்சைப்படுத்துவதற்கு சமம்... அவதார் அன்னபூரணி அதிரடி..!

Published : Dec 29, 2021, 11:27 AM IST
என்னை தவறாக பேசுவது அவரவர் தாயை கொச்சைப்படுத்துவதற்கு சமம்... அவதார் அன்னபூரணி அதிரடி..!

சுருக்கம்

அம்மா என்றே அழைப்பார்கள். எனக்கு மூன்றாவது கணவர், நான்காவது கணவர் என்று கூறும் பெயர்கள் கூட யார் என எனக்கு தெரியாது. என்னை தேடி வரும் குழந்தைகளை கொச்சை படுத்துகிறீர்கள். 

அன்னபூரணி அரசு தான் கடந்த இரு தினங்களாக சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார். எங்கும் அவரை பற்றிய கமெண்டுகள் குவிந்து வருகின்றன. அவரை பற்றிய பல தகவல்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அன்னபூரணியோ தான் அம்மா. அனைவரையும் காக்க வந்திருக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்காதீர்கள். நான் அவதரித்த நோக்கத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். 

இந்நிலையில், இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக போலி சாமியார் அன்னபூரணி செயல்பட்டு வருவதாகக் கூறி அவரை கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக பேட்டியளித்துள்ள அன்னபூரணி, ‛‛எல்லா மீடியாக்களும் என்னை மிரட்டுகிறார்கள். எங்களுக்கு பேட்டி தரவில்லை என்றால், நாங்கள் தவறாக தான் சித்தரிப்போம் என்றார்கள். என் குழந்தைகள் அன்பின் மிகுதியில் என்னை ஆதிபராசக்தி என்று அழைத்தார்கள். இனி என்னை அவ்வாறு அழைக்கமாட்டார்கள். அம்மா என்றே அழைப்பார்கள். எனக்கு மூன்றாவது கணவர், நான்காவது கணவர் என்று கூறும் பெயர்கள் கூட யார் என எனக்கு தெரியாது. என்னை தேடி வரும் குழந்தைகளை கொச்சை படுத்துகிறீர்கள். யாருடனும் தொழில் போட்டி போட நான் வரவில்லை. நான் வந்த நோக்கம் வேற. இங்கு ஆன்மிகம் தவறாக போய் கொண்டிருக்கிறது. நீங்க யார், உங்களை இயக்குவது எது, என்பதை உணர்த்தவே நான் வந்துள்ளேன்.
 
என்னைத் தேடி அம்மாவா, தாயாக தேடி வருபவர்களை அரவணைக்க தயாராக உள்ளேன். தவறான கண்ணோட்டத்தில் எனக்கு வாட்ஸ்ஆப் அனுப்பாதீங்க. நான் அந்த மாதிரி ஆள் இல்லை. சமுதாயத்தில் நடப்பதைப் போன்று என்னையும் நினைக்கிறீர்கள். அதை வார்த்தைகளால் என்னால் கூற முடியவில்லை. ரொம்ப ரொம்ப கொச்சை படுத்துறீங்க. என்னை தவறா பேசுவது, அவரவர் தாயை கொச்சைப்படுத்துவதற்கு சமம். அரசு உடன் வந்ததை கொச்சைப்படுத்தி, மற்ற ஆண்களுடன் தொடர்புபடுத்தி பேசாதீங்க. 


அரசு மர்மமான முறையில் இறந்ததாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கூட என்னிடம் உள்ளது. அதை நான் வழங்க வேண்டிய இடத்தில் வழங்குவேன். இது தெரியாமல், என் மீது பழி போடுகிறீர்கள். இதோடு அனைத்தையும் நிறுத்திவிடுங்கள். இனி ஆதிபராசக்தி என்ற பெயரை பயன்படுத்தமாட்டேன்; அம்மா என்ற பெயரை மட்டுமே பயன்படுத்துவேன். 

1 ம் தேதி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டேன். எந்த வழக்கும் என் மீது இல்லை. இனி நடத்துவதாக இருந்தால், முறையாக அனுமதி பெற்று நடத்துவேன். எனக்கு மிக மோசமான வாட்ஸ்ஆப் எல்லாம் வருகிறது. நான் தலைமறைவாக இல்லை. என்னை யாரும் தேடவில்லை. செங்கல்பட்டு காவல்நிலையத்திற்கு நான் போன் செய்து தெளிவுபடுத்திவிட்டேன்’’எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!