புத்தாண்டு இரவு அனைத்து கொண்டாட்டங்களுக்கும் ஆப்பு .. சென்னை போலீஸ் பயங்கர கட்டுப்பாடு.

By Ezhilarasan BabuFirst Published Dec 29, 2021, 11:26 AM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல், தடுப்பு காரணமாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவரம் பின்வருமாறு:-  

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல், தடுப்பு காரணமாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவரம் பின்வருமாறு:- 

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தவும், தற்போது பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும் தமிழக அரசு சில தகவல்களுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில், வெளியில் ஒன்று கூடுவதால் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலாகக் கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும் படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் உத்தரவின்பேரில் வருகிற 31-12-2021 ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து கீழ்காணும் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது:-

2022 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பையொட்டி 31-12-2021  அன்று இரவு சென்னை பெருநகரில் பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சென்னை பெருநகரில் அனைத்து மக்களும் புத்தாண்டை கொண்டாடும் பட்சத்தில் தற்போதைய கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கொரோனா நோய்தடுப்பு நடத்தை விதி முறைகளை கடைப்பிடித்து மற்றவர்களின் உணர்வுகள் புண்படாத வகையில் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.பொதுமக்கள் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் ஒன்றுகூட வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

31-12-2021 அன்று இரவு 9 மணி முதல் சென்னை பெருநகரில் மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான காமராஜர் சாலை மற்றும் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையை ஒட்டிய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்படும். கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, அருகே ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடக்கூடாது. ரிசார்ட்டுகள். பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தகரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் வில்லா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்றுகூடி நடத்தக்கூடாது.

ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள், தமிழக அரசு வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா? என ஓட்டல் நிர்வாகம் கண்காணித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து ஓட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும், பொது இடங்களிலும், கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டு தளங்களிலும் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனர் என கண்காணிக்க வேண்டும். மேலும் அங்கு வரும் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தி அனைத்து நுழைவு வாயில்களிலும் அகச்சிவப்பு இன்பர் ரெட் மற்றும் தெர்மல் ஸ்கேனர் கருவிகளைக் கொண்டு பரிசோதித்து அனுமதிக்க வேண்டும்.

சென்னை பெருநகர காவல் துறையினர் 31-12- 2021 அன்று இரவு முக்கிய இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து பொதுமக்கள் கூடும் இடங்களை கண்காணித்து, அனைத்து முக்கிய இடங்களில் ரோந்து சென்று, கண்ணியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர். பைக்ரேஸ் மற்றும் அதி வேகமாக வாகனங்களை இயக்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆகவே கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, களியாட்டங்களில் ஈடுபட்டு தேவையற்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்த்து, சென்னை பெருநகர காவல் துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!