உளவுத்துறை கண்காணிப்பில் 50 எம்.எல்.ஏ.க்கள்! கொத்தாக வரும் ஸ்லீப்பர் செல்ஸ்... கெத்து காட்டப்போகும்  தினா!

 
Published : Dec 29, 2017, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
உளவுத்துறை கண்காணிப்பில் 50 எம்.எல்.ஏ.க்கள்! கொத்தாக வரும் ஸ்லீப்பர் செல்ஸ்... கெத்து காட்டப்போகும்  தினா!

சுருக்கம்

Ministers and MLA Monitoring Intelligence

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் பலம் வாய்ந்த அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. இதனையடுத்து தங்களது குடும்பத்தின் கட்டுப்பாட்டை மீறிப்போன ஆளும் கட்சியான அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் சசிகலாவும் அவர் குடும்பத்தினரும் தவித்து வந்த நிலையில், ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகரில், இரட்டை இலையை தோற்கடித்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

மன்னார்குடி குடும்பத்திலிருந்து முதன்முதலாக MLA வாக சட்டசபைக்குள் நுழைய இருக்கும் தினகரன், அடுத்தக்கட்டமாக கட்சியையும் ஆட்சியையும்  கைப்பற்றும் வேலைகளில் இறங்குவார் என்று தெரிகிறது. இதனால் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது. இதனையடுத்து இன்று 1. 00 மணிக்கு தினகரன் தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் அறையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க உள்ளார்.

இதனையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தினகரன், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் செல்கள் பேட்டரி போட்ட மாதிரி எழுந்து நிற்பர் என்று கூறியிருந்தார்.

கடந்த 25-ஆம் தேதி அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் முதல் கட்டமாக தினகரனுக்கு ஆதரவாக உள்ள 6 மாவட்ட செயலாளர்களை  நீக்கப்பட்டனர். இதனையடுத்து, தினகரன் ஆதரவாளர்கள் 45 பேர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி – பன்னீரின் இந்த அதிரடியை அடுத்து, தினகரனுக்கு தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் என சொல்லும் MLA’க்கள் “முதல் கட்டமாக மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளார்களாம். அவர்களைத் தொடர்ந்து மற்ற மாவட்ட எம்.எல்.ஏ.க்களும் தினகரனுக்கு ஆதரவு கொடுப்பார்கள்”  கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்ல, இன்று நடக்கும் தினகரன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சில அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கக்கூடும் என்று வெளியாகியுள்ள தகவல்களால் அ.தி.மு.க. தலைமை அதிர்ச்சியில் உள்ளதாம். தினகரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.எல்.ஏ. ஆக தேர்வானதும் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்று சொல்லப்பட்டது. அவர்களில் 6 பேர் அமைச்சர்கள் என்கிறார்கள். மேலும் தினகரனுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக கூறப்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ரகசியமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம். அதன்பேரில் பெரும்பாலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தற்போது உளவுத்துறையின் ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, உடனுக்குடன் தகவல்கள் அ.தி.மு.க. மேலிட தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தினகரனில் ஸ்லீப்பர் செல்கள் என தினகரனின் ஆதரவாளர்களால் சொல்லப்படும் அந்த  50 எம்.எல்.ஏ.க்கள் தான் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களது அனைத்து தகவல் தொடர்புகளும் ஒட்டு கேட்கப்படுகிரதாம். கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் மத்திய மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள், இவர்கள் கொத்தாக தினகரனுக்கு ஆதரவு கொடுக்க வெளியில் வருவார்கள் என எடப்பாடி – பன்னீர் அணிக்கு கொடுத்த அடுத்த டிவிஸ்ட்டாம்.

PREV
click me!

Recommended Stories

நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?