
வெல்ல பாதிப்பு ஏற்பட சாத்தியமுள்ள இடங்களை முன்கூட்டியே ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போதிய அளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை காலம் தமிழகத்தில் நேற்றுடன் நிறைவடைந்தது. தென்மேற்கு பருவமழை இயல்பை விட 31 செ.மீ அதிகமாக பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருவதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதால் தமிழகத்தில் டிசம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்யும்.
இந்நிலையில் இன்று பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தமிழகத்தில் 70, 367 நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை தேவை என தெரிவித்தார்.
வெல்ல பாதிப்பு ஏற்பட சாத்தியமுள்ள இடங்களை முன்கூட்டியே ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போதிய அளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.