
தமிழகத்தில் காங். உட்பட எந்த தேசிய கட்சியும் காலூன்ற முடியாது எனவும் ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு, பகல் கனவாகவே இருக்கும் எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக அவர்கள் தர்ப்பிலேயே தினகரன் அணி போர்கொடி தூக்கி போராடி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சியான திமுகவும் அதற்கு எதிரான பாஜகவும் தன்னால் முடிந்த அளவு சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். ஆனாலும் மோடியின் ஆதரவால் தான் அதிமுக ஆட்சி நிலைக்கிறது என எதிர்கூட்டணி கட்சிகள் அறைக்கூவல் விடுத்து வருகின்றனர்.
இதனிடையே கரூரில் கொங்கு திருமண மண்டபத்தில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழிசை தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் காலம் வந்துவிட்டது எனவும் பாஜக ஆட்சி அமைந்த பின்பு தான் என் உயிர்போகும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தம்பிதுரை தமிழகத்தில் காங். உட்பட எந்த தேசிய கட்சியும் காலூன்ற முடியாது எனவும் ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு, பகல் கனவாகவே இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும் 1967 க்கு பிறகு திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி புரிவதாக அவர் தெரிவித்தார்.