ஸ்டாலின் தலைவர் பதவி விலக தயாரா? நான் விலகுகிறேன்... ஒத்தைக்கு ஒத்தை சவால் விடும் வேலுமணி!

By sathish kFirst Published Sep 11, 2018, 3:38 PM IST
Highlights

ஸ்டாலின் தலைவர் பதவி விலக தயாரா? நான் விலகுகிறேன்... ஒத்தைக்கு ஒத்தை சவால் விடும் அமைச்சர் வேலுமணி என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் நிரூபித்தால், நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும், அப்படி குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய தயாரா? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழலின் மணியான கதாநாயகனாக, அதிமுக அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி இருந்து கொண்டு, அவரது சகோதரரின் நிறுவனங்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சி துறையை கொள்ளையாட்சி துறையாக உருக்குலைத்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

தமிழக அரசுக்கு எதிராக முதலமைச்சர், துணை முதலமைச்சர் என தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும் திமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி துறை விதியை மீறி எந்த டெண்டரும் வழங்கப்படவில்லை. என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத்தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

2017-18 ஆம் நிதியாண்டில் உள்ளாட்சி துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசின் 6 விருதுகளை தமிழக அரசின் சார்பில் அவர் பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அமைச்சர் பதவியை பயன்படுத்தி, ஊரக வளர்ச்சி துறையில் எந்த முறைகேடும் தான் செய்யவில்லை என்று கூறினார். 

தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும், அப்படி என் மீதான புகாரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிரூபிக்காவிட்டால், திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்றும் அவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டமாக கேள்வி எழுப்பினார்.

click me!