எலியும், காட்டுப்பன்னியும் சேர்ந்து வைகை ஆத்தங்கரையில என்ன பண்ணியிருக்குதுன்னு தெரியுமா?: அமைச்சர் சொன்ன அம்மாடியோவ் தகவல்.

By Vishnu PriyaFirst Published Dec 10, 2019, 12:48 PM IST
Highlights

*    மத்திய மாநில அரசு பணியாளர்கள் தேர்வுக்கு ஒரே தகுதித் தேர்வு நடத்த திட்டமிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தமிழக அரசு இதற்கு துணை போகக்கூடாது. பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள பொது தகுதி தேர்வு அறிவிக்கையை, மத்திய மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும். 
 

எலியும், காட்டுப்பன்னியும் சேர்ந்து வைகை ஆத்தங்கரையில என்ன பண்ணியிருக்குதுன்னு தெரியுமா?:    அமைச்சர் சொன்ன அம்மாடியோவ் தகவல்.


*    மத்திய மாநில அரசு பணியாளர்கள் தேர்வுக்கு ஒரே தகுதித் தேர்வு நடத்த திட்டமிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தமிழக அரசு இதற்கு துணை போகக்கூடாது. பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள பொது தகுதி தேர்வு அறிவிக்கையை, மத்திய மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும். 
-    வைகோ.

*    உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை! எனும் நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பானது, நடிகர் கமலஹாசனுக்குதான் ஏமாற்றம் அளிக்கிறது. ஏனென்றால் அந்த நடிகரின் ஆதரவைதான், கட்சி நடத்தும் இந்த நடிகர் எதிர்பார்த்திருந்தார். 
-    அமைச்சர் ஜெயக்குமார்.

*    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பங்கீடு குறைவாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. ஊழல் கட்சிகள், தங்களுக்குள்ளே போட்டுக் கொண்ட வியாபார பங்கீடு மட்டும் அரங்கேறப்போகிறது என்பதே,  பகிரங்கப்படாத நிஜம். அதனால், ஏற்கனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்! என்பதே நமது பிரகடனமாக இருக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே, நம் லட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம். 
-    கமல்ஹாசன். 

*    வெங்காயம் விவகாரத்தில் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் மத்தியரசு தோல்வியடைந்துள்ளது. வெங்காயம் விலை உயர்வால், அது பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்குக் விவசாயிகள் ஆளாகியுள்ளனர். சேகோ ஆலைக்கு விடுமுறை அளிப்பதால், மரவள்ளி கிழங்கு அரவை செய்யவும், உரிய விலை பெறவும் முடியவில்லை. 
-    மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்

*    காங்கிரஸார் அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும். நம் ஆட்சியில் செய்த நல்ல விஷயங்களை அழுத்தமாக பேச வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 15 கோடி பேரின் வறுமையை போக்கினார். இதை ஐ.நா.சபையே அறிவித்தது. காங்கிரஸ் ஆட்சியின் போது எதிர்க்கட்சிகளையும் பெருமைப்படுத்தியது. ஆனால் இன்று காங்கிரஸ் தலைவரை கைது செய்கிறது, மத்தியில் ஆளும் பா.ஜ.க.
-    கே.எஸ்.அழகிரி

*    ஆளுங்கட்சிக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்திட விருப்பமில்லை. அதனால் குளறுபடிக்கு மேல் குளறுபடி செய்கிறது. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை! உள்ளாட்சி தேர்தல் குறித்து தனக்கு அச்சமில்லை! என்று அ.தி.மு.க. கூறினால், தேர்தலை முறையாகவும் நேர்மையாகவும் நடத்திட வேண்டியதுதானே!?
-    இ.கம்யூனிஸ்ட். முத்தரசன் 

*    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்திருக்கும் ப.சிதம்பரம், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை மீறி பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன், தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்து வருகிறார். மத்தியரசு மற்றும் புலனாய்வு அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிதம்பரத்தின் ஜாமினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 
-    அர்ஜூன் சம்பத்

*    நாடு முழுவதும் வெங்காயம் அதிக விலைக்கு விற்றாலும், மேர்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் விலை கட்டுக்குள் உள்ளது. தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுக்காதது ஏன்? பூண்டு விலையும் நாற்பது சதவீதம் அதிகரித்துவிட்டதாக வணிகர்கள் சொல்கின்றனர். உணவு பொருட்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகுதூரம் அந்நியப்படுட் போய்விடுவீர்! எச்சரிக்கை. 
-    மு.க.ஸ்டாலின்

*    பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில், நித்யானந்தா  தொடர்பான வழக்கு சரியாக நடத்தாமல் தாமதமாகிறது. அங்குள்ள அரசு வழக்கறிஞர், விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை. நித்யானந்தாவும் வெளிநாடுக்கு ஓடிவிட்டார். எனவே இந்த வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரிக்க வேண்டும். 
-    லெனின் கருப்பன் வழக்கறிஞர் 
*    வைகை அணையின் 58ஆம் கால்வாய் கரையில், எலி, காட்டுப்பன்றி உள்ளிட்டவை ஏற்படுத்திய துளைகளால், கால்வாயின் கரைகள் பலவீனமடைந்து, உடைப்பு ஏற்பட்டுள்ளது. 
-    அமைச்சர் உதயகுமார்

click me!