தேர்தலை நிறுத்த சென்ற திமுக கூட்டணி கட்சி... ஒரே நாளில் திருமாவளவனுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Dec 10, 2019, 12:11 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர்கள் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

மறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்டவிரோதமானதல்ல என்று கூறி திருமாவளவனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர்கள் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. இந்த சட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது. எனவே மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சாகி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல எனக் கூறி திருமாவளவனின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தேவைப்பட்டால் மனுதாரர் அங்கு செல்லலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

click me!