நித்தியானந்தா மாதிரி தீவு வாங்கி மு.க.ஸ்டாலின் முதல்வராகலாம்... அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்.!

By vinoth kumarFirst Published Dec 10, 2019, 11:14 AM IST
Highlights

திமுக ஒரு குழப்பமான கட்சி. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் குழப்பவாதி என விமர்சனம் செய்தார். மு.க.ஸ்டாலின் குழப்பத்துக்கு காரணம் அவரது முதல்வர் கனவுதான். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழு மனதாக ஏற்கிறோம். இது வரலாற்று மிக்க தீர்ப்பு என சொன்னதே திமுக தலைவர் ஸ்டாலின் தான். அந்த வாய் இப்படி சொல்லிட்டு, அப்ப அதேவாய் என்ன சொல்கிறது பாருங்கள்.

முதல்வராக விரும்புவோர் நித்தியானந்தா மாதிரி தீவு வாங்கி அதற்கு முதல்வராகி கொள்ளலாம் என மு.க.ஸ்டாலினை அமைச்சர் ஜெயக்குமார் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். 

ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார். மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் ராஜாஜியின் புகழ் குறித்து பேசினார். முதல்வராக விரும்புவோர் நித்தியானந்தா மாதிரி தீவு வாங்கி அதற்கு முதல்வராகி கொள்ளலாம் என்றார். மு.க.ஸ்டாலின் மல்லமல்ல, யார் யார் எல்லாம் முதல்வராக விரும்புகிறார்கேளா அவர்கள் தீவு வாங்கிக் கொள்ளலாம் என கிண்டல் செய்துள்ளார். 

மேலும், அவர் பேசுகையில், திமுக ஒரு குழப்பமான கட்சி. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் குழப்பவாதி என விமர்சனம் செய்தார். மு.க.ஸ்டாலின் குழப்பத்துக்கு காரணம் அவரது முதல்வர் கனவுதான். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழு மனதாக ஏற்கிறோம். இது வரலாற்று மிக்க தீர்ப்பு என சொன்னதே திமுக தலைவர் ஸ்டாலின் தான். அந்த வாய் இப்படி சொல்லிட்டு, அப்ப அதேவாய் என்ன சொல்கிறது பாருங்கள். தமிழகத்தில் யாராலும் முதல்வராக முடியாது. அது அதிமுகவால் மட்டும்தான் முடியும் என்றார். 

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை. துக்ளக் ஆசியரியர் குருமூர்த்தி தொடர்பாக செய்தியாளர்களுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் குருமூர்த்தி அரசியலில் கத்துக்குட்டி அவருக்கு அரசியல் பற்றி ஒண்ணும் தெரியாது. குருமூர்த்தியை எங்கள் அளவுக்கு யாராலும் விமர்சித்திருக்க முடியாது. அவரை கண்டு நாங்கள் அஞ்சவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

click me!