அமைச்சர், எம்எல்ஏவுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்..!

By vinoth kumarFirst Published Jul 9, 2020, 6:31 PM IST
Highlights

ஜார்க்கண்டில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

ஜார்க்கண்டில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் மிதிலேஷ் தாக்குருக்கும், ஆளும்கட்சி எம்எல்ஏ மதுரா மஹாட்டோ என்பவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும்  எம்எல்ஏ தனாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விசாரணை நடைபெற்றது. அதில், முதல்வர் ஹேமந்த் சோரனும் அவர்களுடன்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஹேமந்த் சோரன், தனது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் அமைச்சரும் எம்எல்ஏவும் விரைவில் குணமடைய வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

click me!