அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து முகநூலில் அவதூறு.. திமுக பிரமுகரை அலேக்கா தூக்கிய போலீஸ்..!

By vinoth kumarFirst Published May 17, 2020, 10:59 AM IST
Highlights

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பிய திமுக நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பிய திமுக நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்தவர் ரியாஸ்கான் (21). இவர் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் நான் அதிமுகவில் கோவை புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக உள்ளேன். கோவை மாநகர் கிழக்கு மாவட்டதிமுக விவசாய அணி நிர்வாகி ராமமூர்த்தி என்பவர் சமூகவலைத்தளத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு தகவல்களை பதிவிட்டு அவதூறு பரப்பி வருகிறார். 

அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் ராமமூர்த்தி மீது வழக்குபதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து, சிறையில் அடைத்தனர்.  திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று இரவு சிங்கநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பியவர்கள் கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

click me!