எடப்பாடியாருக்கு சுத்தி, சுத்தி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி... சட்டப்பேரவையில் சரவெடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 24, 2021, 11:06 AM IST
Highlights

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நோய் தொற்றைக் குறைத்து, நோய்த்தொற்று பகுதியை மூன்றாக பிரித்து, பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் மதுபான கடைகள் திறக்க உத்தரவிட்டார். 

கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி அன்று அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் மதுக்கடைகளை மூட வேண்டுமென தமிழகம் முழுவதும் கையில் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் 07.05.2020 மதுக் கடைகள் திறந்த போது 4.1 சதவீதம், 08.05.2020 அன்று 4.3 சதவீதம் இருந்தது. 8ம் தேதி மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. உச்சநீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று 23.05.2020ம் அன்று முந்தைய அரசு மதுக்கடைகளை திறந்தது.

கடைகளை திறந்த பிறகு மே 25ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.8 சதவீதம், மே 31, 2020 அன்று 9 சதவீதமாகவும், ஜூன் 8,2020 அன்று  10.4 சதவீதமாகவும் கொரோனா தொற்று இருந்தது. நோய் தொற்றின் அளவு அதிகமாக இருந்த போது மதுக்கடைகளை திறந்தது அரசு முந்தைய அரசு. 

ஆனால் திமுக ஆட்சியில் நோய் தொற்றை மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, மறைக்க வேண்டிய அவசியத்தை எங்கள் முதலமைச்சர் கொடுக்கவில்லை. அப்படி மறைக்கவும் முடியாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நோய் தொற்றைக் குறைத்து, நோய்த்தொற்று பகுதியை மூன்றாக பிரித்து, பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் மதுபான கடைகள் திறக்க உத்தரவிட்டார். டாஸ்மாக் கடைகளை கடந்த 14ம் தேதி திறக்கும் போது அந்த 27 மாவட்டங்களில் 5.4 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருந்தது. நேற்றைய நிலவரப்படி 2.8 சதவீதம் பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5 சதவீத்திற்கு மேல் உள்ள 11 மாவட்டங்களில் நோய் தொற்று சதவீதம் குறைந்து கொண்டு வந்த போதும் டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் அனுமதி அளிக்கவில்லை. இந்த ஆட்சியில் நோய் தொற்று அதிகரித்து, ஆனாலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது என்பது போன்ற தவறான‌ தோற்றத்தை உருவாக்க வேண்டாம்.

கடந்த ஆட்சியில் மதுக்கடைகளை திறக்கப்பட்ட போது நோய் தொற்றின் சதவீதம் அதிகரித்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், நோய் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.  எஞ்சியுள்ள மாவட்டங்களில் நோய் தொற்று குறைய வேண்டும் என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என தெரிவித்தார். 

அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் இருந்தது போது உச்சபட்சமாக கொரோனா தொற்றால் 7 ஆயிரம் பேர் தான் பாதிக்கப்பட்டார்கள். சதவீதத்தை கூறி நீங்கள் தப்பிக்கொள்ள முடியாது என கூறினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 08.06.2020 அன்று நீங்க எடுத்த RTPCR டெஸ்ட் 14 ஆயிரத்து 984 அதன் நோய்த் தொற்று சதவீதம் 10.4 சதவீதம், ஆனாலும் அன்று மதுக்கடைகள் செயல்பட்டன.

தற்போது 18.06.2021 அன்று எடுக்கப்பட்ட RTPCR டெஸ்ட் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 269. அதன்‌ நோய்த் தொற்று சதவீதம் 3.6. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் இரும்பாலையில் கூட அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையாக 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று குறைவான மாவட்டங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன, எஞ்சிய மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை என்பதை திட்டவட்டமாக பதிவு செய்தார். 

கடந்த ஆட்சியில் 07.05.2020 மதுக் கடைகள் திறந்த போது 4.1% 08.05.2020 அன்று 4.3% 8ம் தேதி மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. உச்சநீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று 23.05.2020ம் அன்று முந்தைய அரசு மதுக்கடைகளை திறந்தது.

25.05.2020 6.8%, 31.05.2020 9.0% 08.06.2020 10.4% pic.twitter.com/gqAsfZ9Wlh

— V.Senthilbalaji (@V_Senthilbalaji)
click me!