ஓடிப்போன அணில்கள் எல்லாம் மீண்டும் வந்து மின்தடை.. கிண்டல் செய்த அதிமுக.. பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி..!

By vinoth kumarFirst Published Aug 17, 2021, 4:49 PM IST
Highlights

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 50% மின்சார பயன்பாடு அதிகரித்த போதும், கட்டணம் அதிகளவில் வசூலாகவில்லை. மின் துறையில் தமிழ்நாடு அரசை ஒவ்வொரு முறையும் தவறான தோற்றத்தில் சித்தரிக்க முயற்சித்து வருகின்றனர். 

மின் துறையில் தமிழ்நாடு அரசை ஒவ்வொரு முறையும் தவறான தோற்றத்தில் சித்தரிக்க முயற்சித்து வருகின்றனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று தொடங்கி நடைபெற்றது. அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஓடிப்போன அணில்கள் எல்லாம் மீண்டும் வந்து மின் தடையை ஏற்படுத்துகிறது என்றார்.

இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்கையில்;- தமிழ்நாட்டில் சொந்த மின் உற்பத்தி குறைந்துவிட்டது. 
தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல. புதிய மின் உற்பத்தி நிலையங்களைக் கொண்டு கூடுதல் மின் உற்பத்தியை மேற்கொண்டதைப் போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகின்றனர். 

4.52 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். கடந்த 9 மாத காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை . தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று முற்றிலும் தவறானது. மின் உற்பத்தியை பெருக்குவதற்காக சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 50% மின்சார பயன்பாடு அதிகரித்த போதும், கட்டணம் அதிகளவில் வசூலாகவில்லை. மின் துறையில் தமிழ்நாடு அரசை ஒவ்வொரு முறையும் தவறான தோற்றத்தில் சித்தரிக்க முயற்சித்து வருகின்றனர். 

மின் கட்டண கணக்கீட்டில் எங்கு குறை உள்ளது என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக யாரேனும் சுட்டிக்காட்டினால் அது உடனடியாக சரி செய்யப்படும். கடந்த ஆட்சியில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடை ஏற்பட்ட எண்ணிக்கை 15,000-க்கும் அதிகம் என்றார். 

click me!