12 பட்டியல் இனத்தவர்... 8 மலைவாழ் இனத்தவர்... 22 பிற்படுத்தப்பட்டவர்கள்... மக்கள் ஆசி யாத்திரை இதற்காகத்தானாம்

Published : Aug 17, 2021, 04:05 PM IST
12 பட்டியல் இனத்தவர்... 8 மலைவாழ் இனத்தவர்... 22 பிற்படுத்தப்பட்டவர்கள்... மக்கள் ஆசி யாத்திரை இதற்காகத்தானாம்

சுருக்கம்

ஓபிசி பிரிவில் இடம்பெறும் சாதிகளின் பட்டியலை திருத்தியமைத்து சமூக நீதியை நிலை நாட்டியவர் பிரதமர் மோடி. மக்கள் என்னை வாழ்த்தி அனுப்ப வேண்டும்

எங்களை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முயன்றபோது எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டு தடுத்தனர். அதனால்தான் தற்போது உங்களிடம் ஆசி பெறுவதற்காக மோடி எங்களை அனுப்பியுள்ளார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.  

மக்கள் ஆசி யாத்திரையை பாஜக தொடங்கியுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொண்டர்களை சந்தித்து வருகின்றனர். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் ‘மக்கள் ஆசி யாத்திரை’சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் நேற்று முதல் தொடங்கினார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பேசிய எல்.முருகன், “12 பட்டியல் இன மத்திய மந்திரிகள், மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்கள் 8 பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 22 பேர், 12 பெண்கள் என புதிதாக மத்திய அரசில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முயன்றபோது எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டு தடுத்தனர். 

அதனால்தான் தற்போது உங்களிடம் ஆசி பெறுவதற்காக மோடி எங்களை அனுப்பியுள்ளார். அதுதான் மக்கள் ஆசி யாத்திரை. ஓபிசி பிரிவில் இடம்பெறும் சாதிகளின் பட்டியலை திருத்தியமைத்து சமூக நீதியை நிலை நாட்டியவர் பிரதமர் மோடி. மக்கள் என்னை வாழ்த்தி அனுப்ப வேண்டும்’’ என அவர்கேட்டுக்கொண்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!