திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்து ஆய்வு முடிவை தெரிவிக்க வேண்டும்.
அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நபரை அமைச்சர்கள் சந்திப்பது விதிமுறை மீறல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப செந்தில்பாலாஜி கைது உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை ஊரார் கைதட்டி வரவேற்கின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது. சட்டம் தன் கடமையை செய்கிறது.
இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி உள்ளது? ஓமந்தூரார் மருத்துவமனை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!
திமுக ஆட்சியில் சட்டவிரோத டாஸ்மாக் பார்கள் மூலம் ரூ.2000 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. சட்டவிரோத மதுபான விற்பனையால் அரசின் கருவூலத்திற்கு வருவாய் இழப்பு. டாஸ்மாக்கில் நிகழ்ந்த முறைகேட்டால் கிடைத்த பணம் ஒரே குடும்பத்திற்கு சென்றுள்ளது. அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் தான் மதுவிற்கப்பட்டது. திமுக ஆட்சியில் 24 மணிநேரமும் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளில் பார்கள் மூலம் ஒன்றரை சதவிகிதம் வரைவு காசோலை மூலம் அரசுக்கு வரும் அதை செந்தில்பாலாஜி தனக்கு வரும்படி செய்துள்ளார் என ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..!
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்து ஆய்வு முடிவை தெரிவிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி காவலரை எட்டி உதைத்துள்ளார். நெங்சுவலி வந்தால் எப்படி உதைக்க முடியும். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு அமைச்சர் பதிவியில் இருந்து உடனே செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க;- பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது..! தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- ஸ்டாலின் எச்சரிக்கை
மேலும், நகமும் சதையுமாக அமைச்சரும் முதலமைச்சரும் உள்ளனர். குறிப்பாக, அண்ணாநகரில் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஏன் நீங்கள் இப்படி நடந்துகொள்ளவில்லை. வருமானவரித்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி செல்லவேண்டியது தானே? என ஜெயக்குமார் கூறியுள்ளார்.