ஆசிரியர்கள் போராட்டம்... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..? செங்கோட்டையன் அவரச ஆலோசனை

By vinoth kumarFirst Published Jan 28, 2019, 1:39 PM IST
Highlights

ஆசிரியர்கள் போராட்டம் 7 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் தலைமை செயலருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரச ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமாக உள்ளதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

ஆசிரியர்கள் போராட்டம் 7 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் தலைமை செயலருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரச ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமாக உள்ளதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7-வது நாளாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது. ஆனால் மிரட்டல் உருட்டல்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஆசிரியர்களை  பணிக்கு திரும்ப வைக்க அரசு பல்வேறு அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகிறது. பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்படும். ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பவில்லை என்றால் அவர்களது பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்படும். ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்தில் பணி மாற்றம் வழங்கப்படும்’’ என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனாலும், எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சபோவதில்லை, போராட்டம் தொடரும்’ என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

 

இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் போராட்டம் தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன்  செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து  நிதித்துறை செயலாளர் சண்முகத்துடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

click me!