’40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டி..?’ ஸ்டாலினை தெறிக்க விட்டு செல்லூர் ராஜூ அதிரடி!

By Thiraviaraj RMFirst Published Feb 2, 2019, 4:02 PM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நகைச்சுவை நடிகராக மாறி வருதாக கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நகைச்சுவை நடிகராக மாறி வருதாக கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ரூ1.50 கோடி மதிப்பீட்டில் 40 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்ட கால்கோல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செயதியாளர்களிடம் பேசுகையில், ‘’’’அமைச்சர்களை பொறுத்த வரை யார் வேண்டுமானாலும் அரசியல் கருத்துக்கள் பேசலாம். ஆனால் கூட்டணி குறித்து ஆட்சிமன்ற குழுக்கள் மற்றும் தலைமை தான் முடிவெடுக்கும். அதுவும் தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும். 

40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நிற்பது போல் தான் தற்போது வரை பணியாற்றி வருகிறோம். 40 தொகுதிக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார். தனித்து நிற்பதா? கூட்டணி வைப்பதா? என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. ஊர் ஊராக சென்று ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார்.

எம்.ஜி.ஆர். இருக்கும் வரை 14 ஆண்டுகள் வனவாசம் சென்றது திமுக தான். துணை முதல்வராக ஸ்டாலின் இருந்த போது எந்த ஒரு ஊருக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்கவில்லை. கருணாநிதி வழியிலேயே ஸ்டாலினும் மக்களிடத்தில் தற்போது வரை பொய்யாக பேசிக் கொண்டு வருகிறார். திமுக ஆளுங்கட்சியாக வந்தால் குடும்பத்தை மட்டுமே நினைக்கும் ஒரு கட்சியாக மாறும். இதுதான் மக்கள் கூறும் கருத்து. ஸ்டாலின் தற்போது நகைச்சுவை நடிகராக மாறி வருகிறார்’’ என அவர் தெரிவித்தார். 

click me!