தமிழகம் என்றுமே திராவிட பூமி... கருணாநிதியைக் குறிப்பிட்டு பாஜகவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி!

By Asianet TamilFirst Published Dec 25, 2019, 8:28 AM IST
Highlights

தமிழகம் பெரியார் மண், திராவிட மண் என்று திராவிட ஆதரவாளர்கள் சொல்வதற்கு பாஜகவும் இந்துத்துவா அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் தமிழகம் திராவிட பூமி என்றும், தமிழகம் சகோதரத்துவத்துடன் இருக்க பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரோடு சேர்த்து கருணாநிதியையும் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டு பேசியது அதிமுகவினருக்கு மட்டுமல்லமல் திமுகவினருக்கும்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாரை இழிவுப்படுத்திய விவகாரத்தில் தமிழ் நாடு என்றுமே திராவிட பூமி என்று கூட்டணி கட்சியான பாஜகவுக்கு அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடிக் கொடுத்திருக்கிறார்.
பெரியாரின் நினைவு நாளில், அவரைப் பற்றி பாஜக ஐ.டி.வி சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டது. அந்தப் பதிவுக்கு திமுக, மதிமுக, விசிக மட்டுமல்லாமல், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்தப் பதிவை பாஜக நீக்கியது. பெரியார் பற்றி அவதூறாகப் பதிவிட்டதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்திருந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ பாஜகவுக்கு கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,“பெரியாரையும் மணியம்மையையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டவர்களுக்குக் கண்டனம் தெரிவிக்கிறேன். அது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. பெரியார்தான் தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கி கொடுத்தார். தமிழ் நாடு என்றுமே திராவிட பூமி. இந்தியாவில் பல மாநிலங்கள் பிளவுபட்டிருந்தாலும் தமிழகம் என்றுமே ஒன்றுபட்டே உள்ளது. இப்படி தமிழ் நாடு சகோதரத்துவத்துடன் இருக்க பெரியார்,  அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோர் பாடுபட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

click me!