
பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதியே ஸ்கூட்டர் வழங்கப்படுவதாகவும், விவசாயிகளுக்கு இந்த ஆண்டு 7000 கோடி பயிர்க்கடன் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை, சேத்துப்பட்டுவில் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பயிர்காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார். பணிபுரியும் பெண்களுகளின் பாதுகாப்பு கருதியே ஸ்கூட்ர் மானியம் வழங்கப்படுவதாக கூறினார். விவசாயிகளுக்கு இந்தாண்டு ரூ.7000 கோடி பயிர்கடன் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் எனவும் அவர் கூறினார்.
பொதுவிநியோக திட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழகம முன்னணியில் உள்ளது என்றும் சிறப்பு பொது விநியோக திட்டத்துக்கான மானியத்தை மத்திய அரசு 2013 ஆண்டிலேயே நிறுத்தி விட்டது என்றும் கூறினார்.
இருப்பினும் பருப்பு வகைகள், பாமாயில் ரேஷன் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷனில் உளுத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு ஏதேனும் ஒன்றை வாங்கிக் கொள்ளும் நிலை நீடிக்கிறது என்றார்.
மேலும், துவரம் பருப்பு எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் முழுமையாக வழங்கப்படுகிறது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் சென்னையில் 32 கடைகள் உள்ளதாகவும் செல்லூர் ராஜூ குறிப்பிட்டார்.