கோயில்களில் விஐபி தரிசனம்..! விரைவில் முடக்க நடவடிக்கை- சேகர் பாபு உறுதி

By Ajmal KhanFirst Published Nov 22, 2022, 3:59 PM IST
Highlights

பாஜக ஒரு சைத்தான். சைத்தான்களுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக் கூடிய சக்தி படைத்தவர். அதனால் பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது என சேகர்பாபு தெரிவித்தார்.

திருவண்ணாமலை தீபம் சிறப்பு ஏற்பாடு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகள், பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த  சீராய்வுக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு,  பழனி தண்டாயுதபாணி கும்பாபிஷேகம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறினார். தமிழகத்தில் 10 கோயில்களில் அன்னதானம் திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

 திருவண்ணாமலை தீபத்திற்கு 30 லட்சம் பேர் வருவார்கள் என்ற அடிப்படையில் இன்று ஆலோசனை நடைபெற்றதாகவும், 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலை தீபத்தற்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்தாக கூறினார். இதற்காக 16 தற்காலிக பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 400 தூய்மை பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

பாஜக பெண் தலைவருக்கு கொலை மிரட்டல்..! கட்சி நிகழ்ச்சியில் சூர்யா சிவா பங்கேற்க தடை..! உத்தரவிட்ட அண்ணாமலை


விஐபி தரிசனம் முடக்க நடவடிக்கை

தமிழகத்தில் 3739.40 கோடி ரூபாய் மதிப்பில் ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்கப்பட்டு உள்ளதாகவும்,  254 நிலுவை வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மீட்கப்பட்ட நிலங்கள் மதிப்பு, இடம், புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பாக புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 300 கோயில்களில் 1000 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.  சட்டத்திற்கு உட்பட்டே தான் இந்து அறநிலையத்துறை செயல்படுகிறது எனவும், வி.ஐ.பி தரிசனம் திமுக ஆட்சியில் உருவாகியது அல்ல என தெரிவித்தவர்,  நாளடைவில் விஐபி தரிசனம் முடக்கப்படும் என கூறினார். 

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடி நீக்கம்.. அண்ணாமலை அறிவிப்பு..!

தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது

அனைவரும் சமம். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என கூறினார். பாஜக ஒரு சைத்தான். சைத்தான்களுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக் கூடிய சக்தி படைத்தவர். அதனால் பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது என தெரிவித்தார். இந்து சமய அறநிலையத் துறைக்கு, காசித் தமிழ்ச் சங்கம நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லையென்று தெரிவித்தவர்,  வந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக கூறினார்.

இதையும் படியுங்கள்

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு..! பயங்கரவாதி வாட்ஸ் அப் Dp-யாக கோவை ஆதியோகி சிலை.?

click me!