கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உடனே காயத்ரி ரகுராம் போட்ட ட்வீட் என்ன தெரியுமா?

By vinoth kumarFirst Published Nov 22, 2022, 3:05 PM IST
Highlights

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து காயத்ரி ரகுராமுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. 

தமிழக பாஜக கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு என்னை நீக்கியுள்ளனர் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து காயத்ரி ரகுராமுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு  அப்பதவிக்கு பெப்சி சிவகுமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார். தமிழக பாஜகவின் கலை, கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலின்றி கடந்த பிப்ரவரி 1ம் தேதி  கலாச்சார பிரிவில் இருந்து மாநில செயலாளர்கள் உள்ளிட்ட சில நிர்வாகிகளை அவர் நீக்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க;- பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடி நீக்கம்.. அண்ணாமலை அறிவிப்பு..!

இதனால், அண்ணாமலை இவர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்ததை அடுத்து கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு  அப்பதவிக்கு பெப்சி சிவகுமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார். கட்சி பொறுப்பு பறிபோன பின் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில்;- ”எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி” என குறிப்பிட்டிருக்கிறார். இதனையடுத்து, தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராமை  அண்ணாமலை நியமித்தார். 

இந்நிலையில்,  வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தும் கூட வெளிமாநிலத்தில் நடக்கும் தமிழ் தொடர்பான நிகழ்வில் தன்னை புறக்கணிக்கப்படுவதாகவும் அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்திருந்ததார். மேலும், சூர்யா சிவா குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கள் விளைவிக்கும் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தினார். 

I accept. But people who love me will talk to me. No one can stop that. I will work for the Nation with suspension. pic.twitter.com/BM09VEc2vP

— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R)

 

இந்த நீக்கத்தைத அடுத்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- "6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள்,அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  பாஜக பெண் தலைவருக்கு ஆபாச அர்ச்சனை..! கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவா- அதிர்ச்சியில் அண்ணாமலை

click me!