பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடி நீக்கம்.. அண்ணாமலை அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Nov 22, 2022, 12:35 PM IST
Highlights

தமிழ்நாடு பாஜக கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு பாஜக கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

கட்சியில் சீனியர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள், மூத்த நிர்வாகிகளை அவமதிக்கிறார்கள். கட்சியில் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் ஒரு பெண்ணாக இருந்தும் எனக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பாஜகவினர் சிலர் மோசமாக போஸ்ட் செய்து வருவதாக காயத்ரி ரகுராம் கூறியிருந்தார். மேலும், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தும் கூட வெளிமாநிலத்தில் நடக்கும் தமிழ் தொடர்பான நிகழ்வில் தன்னை புறக்கணிக்கப்படுவதாகவும் அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக புகார் வைக்கப்பட்டது. இந்நிலையில், காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க;- பாஜக பெண் தலைவருக்கு கொலை மிரட்டல்..! கட்சி நிகழ்ச்சியில் சூர்யா சிவா பங்கேற்க தடை..! உத்தரவிட்ட அண்ணாமலை


இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். 

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  பாஜக பெண் தலைவருக்கு ஆபாச அர்ச்சனை..! கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவா- அதிர்ச்சியில் அண்ணாமலை

click me!