பாஜக பெண் தலைவருக்கு கொலை மிரட்டல்..! கட்சி நிகழ்ச்சியில் சூர்யா சிவா பங்கேற்க தடை..! உத்தரவிட்ட அண்ணாமலை

Published : Nov 22, 2022, 12:29 PM ISTUpdated : Nov 22, 2022, 12:32 PM IST
பாஜக பெண் தலைவருக்கு கொலை மிரட்டல்..! கட்சி நிகழ்ச்சியில் சூர்யா சிவா பங்கேற்க தடை..! உத்தரவிட்ட அண்ணாமலை

சுருக்கம்

பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணை ஆபாச பேசி கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவாவை கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

மருத்துவரான டெய்சி சரண் யூடியூப் சேனல்களில் மருத்துவ குறிப்புகளை வழங்குவதில் பிரபலமானவர், கடந்த ஆண்டு பாஜகவின் இணைந்த அவருக்கு சிறுபான்மையினர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை போல சூர்யா சிவாவிற்கு ஓபிசி அணியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாஜக சிறுபான்மையினர் அணியில் மற்றவர்களுக்கு பதவி வழங்குவதில் இரண்டு பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டெய்சி சரண் ஆடியோ மெசேஜ் ஒன்றை சூர்யா சிவாவிற்கு அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து டெய்சி சரணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூர்யா சிவா அசிங்கமான மற்றும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அரசியலில் இந்த பிரச்சனைகள் எல்லாம் சகஜமப்பா.? தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றும் கோரிக்கைக்கு திருநாவுகரசர் பதில்

7 நாட்களுக்குள் அறிக்கை

மேலும் கொலை மிரட்டல் விடுத்தும் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக யாரிடம் போய் புகார் அளித்தாலும் தனக்கு கவலை இல்லையென மிரட்டியுள்ளார். இந்த ஆடியோ சமூகவலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இது தொடர்பாக  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் திருமதி டெய்சி சரண் அவர்களுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் திரு சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான திரு கனக சபாபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சி தலைவர்கள் மீது விமர்சனம்..! பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை

கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தடை

ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை OBC அணியின் மாநில பொது செயலாளர் திரு சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். எனவே ஒழங்கு நடவடிக்கை அறிக்கையை தொடர்ந்து பாஜகவில் சூர்யா சிவா தொடருவாரா அல்லது நீக்கப்படுவாரா என தெரியவரும்.

இதையும் படியுங்கள்

பாஜக பெண் தலைவருக்கு ஆபாச அர்ச்சனை..! கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவா- அதிர்ச்சியில் அண்ணாமலை

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!