அமைச்சர் சேகர் பாபு.. ஒரு காமெடி சேனல் மாதிரி.. திமுகவை பங்கம் செய்த வி.பி துரைசாமி.

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2021, 12:55 PM IST
Highlights

அதாவது, தமிழக அரசு தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தயக்கம் காட்டி வருகிறது. ஏன் என கேட்டால் கொரோனா காலம், வெள்ள பாதிப்பு என்றெல்லாம் கூறி தப்பிக்க முடியல்கிறது. பிரதமர் மோடி அவர்கள் கொரோனா தடுப்பூசியை 120 கோடி மக்களுக்கு இன்றளவும் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் திமுக அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர்

தமிழக இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் பேச்சு காமெடி சேனல் பார்ப்பது போல இருக்கிறது என்றும், தடுப்பூசியை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ள நிலையில் ஏதோ தமிழக அரசே சொந்தமான தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு வழங்கியது போல அமைச்சர்கள் பேசி வருகின்றனர் என பாஜக துணைத் தலைவர் வி.பி துரைசாமி விமர்சித்துள்ளார். 

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 150க்கும் அதிகமான நாடுகளை கபளிகரம் செய்துள்ளது. இதுவரை இந்த வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் இன்னும் இந்த வைரஸில் இருந்து மீண்டு வர முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக எப்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என ஒட்டுமொத்த மனித சமூகமும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஒன்றுக்கு இரண்டு  என தடுப்பூசிகளை உருவாக்கிய இந்தியா, 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் அதை மக்களுக்கு செலுத்த தொடங்கியது. துவக்கத்தில் மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோது மக்கள் அதைச் செலுத்திக் கொள்ள தயங்கினார். ஆனால்  தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கு பாதிப்பு மிகக் குறைவாக இருக்கிறது என பல்வேறு தொடர் விழிப்புணர்வு மக்களிடையே  ஏற்படுத்தப்பட்டு பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. 203 நாட்களில் 50 கோடி டோஸ் செலுத்தப்பட்டது. குறிப்பாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சரியாக தடுப்பூசிகளை தருவதில்லை, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அதிகமாகவும், மற்றவர்க்கு குறைவாகவும் தரப்படுகிறது என தமிழகம் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குற்றச்சாட்டின. 

இதனால் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டன. ஆனால் மத்திய அரசு மாநில அரசுகளின் தடுப்பூசி செயல்பாடுகளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படும் என உறுதி அளித்தது. தொடர்ந்து தடுப்பூசிகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தநிலையில், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி  100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவை பாராட்டியுள்ளன. இந்நிலையில் தமிழக அரசும், மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்று வேகவேகமாக மக்களுக்கு செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தமிழக அரசு சீரிய முறையில் தடுப்பூசி செலுத்தி வருகிறது என்றும், இது தமிழக முதலமைச்சரின் சாதனை என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் அதை மேற்கோள் காட்டி தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

அதாவது, தமிழக அரசு தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தயக்கம் காட்டி வருகிறது. ஏன் என கேட்டால் கொரோனா காலம், வெள்ள பாதிப்பு என்றெல்லாம் கூறி தப்பிக்க முடியல்கிறது. பிரதமர் மோடி அவர்கள் கொரோனா தடுப்பூசியை 120 கோடி மக்களுக்கு இன்றளவும் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் திமுக அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், ஏதோ தமிழக அரசே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்கிக் கொண்டிருப்பது போலப் பேசுகின்றனர். அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பேச்சைக் கேட்கும் போது நகைச்சுவை சேனலை பார்ப்பது போல இருக்கிறது. நாட்டில் மொத்தல் 120 கோடி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவதுடன் பல்வேறு ஏழை எளிய நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. இதனால் ஐநா சபை, உலக நாடுகள், கோடிக்கணக்கான மக்கள் உயிரை காப்பாற்றியதற்காக பிரதமர் மோடியை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சாதனையை வேறு எந்த நாடும் படைக்கவில்லை. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளால் கூட செய்ய முடியவில்லை. 120 கோடி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கும் வகையில், தொழிற்சாலைகளை அமைத்து அதை தயாரித்து, பிரதமர் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல எதிரி நாடுகளுக்கு கூட தடுப்பூசிகளை வழங்கும் அளவிற்கு தாயுள்ளத்தோடு மோடி நடந்து கொண்டிருக்கிறார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். 
 

click me!