மு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா? நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி!

By Asianet TamilFirst Published Oct 18, 2019, 10:05 PM IST
Highlights

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு கனிமொழியைபிரச்சாரக்குழு செயலாளராகவும், ஐ.பெரியசாமியை தலைவராகவும் திமுக நியமித்தது. ஆனால், திடீரென கனிமொழி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். கனிமொழியை அரசியலில் இருந்து ஒதுக்குகிறார்களா அல்லது திமுகவில் கனிமொழியின் வளர்ச்சியைக் கண்டு ஸ்டாலின் பயப்படுகிறாரா எனத் தெரியவில்லை.

தமிழக முதல்வர், துணை முதல்வர் உத்தரவிட்டால், அதிமுகவில் யார் வேண்டுமானாலும் ஸ்டாலினை எதிர்த்து நின்று வெற்றிபெறுவோம் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
 நாங்குநேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் ஒன்றை விட்டார்.  “இருவரும் எம்.எல்.ஏ.வை பதவியை ராஜினாமா செய்வோம். இருவரும் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவோம். யார் மக்களின் முதல்வர் என்பதை நிரூபிப்போமா?” என்று ஸ்டாலின் சவால் விட்டிருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் விட்டிருந்த சவாலுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்திருக்கிறார்.


இதுகுறித்து நாங்குநேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் நிற்க வேண்டுமா என்ன? தமிழக முதல்வர், துணை முதல்வர் இருவரும் உத்தரவிட்டால், நான் உட்பட அதிமுகவில் யார் வேண்டுமானாலும் ஸ்டாலினை எதிர்த்து நின்று வெற்றிபெறுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் மக்களிடையே மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதிமுக அரசுக்கு ஆதரவாக மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்கள்  தயாராக உள்ளனர்.

 
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு கனிமொழியைபிரச்சாரக்குழு செயலாளராகவும், ஐ.பெரியசாமியை தலைவராகவும் திமுக நியமித்தது. ஆனால், திடீரென கனிமொழி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். கனிமொழியை அரசியலில் இருந்து ஒதுக்குகிறார்களா அல்லது திமுகவில் கனிமொழியின் வளர்ச்சியைக் கண்டு ஸ்டாலின் பயப்படுகிறாரா எனத் தெரியவில்லை.” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

click me!