திமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் ! அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு !!

Published : Oct 18, 2019, 08:30 PM IST
திமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் ! அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு !!

சுருக்கம்

சென்னை மௌண்ட் ரோடில் உள்ள அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை எடுத்து மீட்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

வரும் 21 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில்  பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட  அமைச்சர் ஜெயக்குமார்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். . 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவே நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர் என்றும் முதலமைச்சராக முடியாது என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்..

PREV
click me!

Recommended Stories

Rahul Gandhi: சாதி ரீதியான சர்ச்சை பேச்சு? ராகுல் காந்தி மீது பாய்ந்தது வழக்கு!
Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!