
நடிகர்கள் கட்சியெல்லாம் தீபாவளி ரீலீஸ் படம் மாதிரி… ஒரு 2 மாசம் ஓடும் அவ்வளவுதான்…. அதிரடி ராஜேந்திர பாலாஜி!
நடிகர்கள் கட்சி தொடங்குவது என்பது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டது என்றும் அவர்கள் தொடங்கும் கட்சி தீபாவளி ரிலீஸ் படம் போல் அதிகபட்சமாக 2 மாதம் தான் ஓடும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக தொரிவித்தார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது கூறும் அதிரடி கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தும். ஆட்சி கலைந்துவிடுமே என்று அதிமுக தொண்டர்கள் நினைத்திருந்போது எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என பேசி அதிரடியைக் கிளப்பியவர்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர், நடிகர்கள் கட்சி தொடங்குவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தார். நடிகர்கள் தொடங்கும் கட்சி, தீபாவளி ரிலீஸ் படம் போலதான் என்றும், ஒரு 2 மாசம் பரபரப்பாக ஓடிட்டு அப்புறம் பெட்டிக்குள் சுருண்டுவிடும் என கிண்டல் செய்தார்.
ஆண்டாள் என்பவர் ஒரு கடவுள்…அவரை லட்சக்கணக்கானோர் வழிபடுவதாகவும், தான் கூட அடிக்கடி ஆண்டாளை வணங்குவதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஆண்டாள் குறித்து தவறாக பேசுவது தவறு என்றும், வேறு ஒரு மதத்தின் கடவுளை இப்படி பேச முடியுமா ? என கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்து கடவுள்கள் என்ன கிள்ளுகீரையா எனவும் தெரிவித்தார்.
ஆனால் கவிஞர் வைரமுத்து அவர் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்த பிறகும், அவருக்கு எதிராக பேசுவதும், போராட்டம் நடத்தவதும் தேவையில்லாத ஒன்று எனவும் அமைச்சர் ராஜேந்தி பாலாஜி கூறினார்