இடைத்தேர்தலில் கிடைத்தது கெத்து வெற்றி... உள்ளாட்சித் தேர்தலில் உறுதியான வெற்றி... ராஜேந்திர பாலாஜி சரவெடி!

By Asianet TamilFirst Published Oct 31, 2019, 7:10 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய சரிவை அடைந்துவிட்டோம். தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை பரப்பியது. அதை வைத்து வெற்றி பெற்றது. அவையெல்லாம் பொய்யான வாக்குறுதிகள் என்பதை மக்களிடம் எடுத்து  சொன்னோம். அது வேலூர் நாடாளுமன்றத் தேர்தலிலேயே எதிரொலித்தது. அந்தத் தேர்தலில் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றது. அது திமுகவுக்கு பெரிய வெற்றியே கிடையாது.
 

டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்றுவருகின்றன. வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பரில் நடைபெறும் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதைத் தெரிவித்தார். 
 “டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக நடைபெறும். தமிழக முதல்வரும் இதைத் தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் ஆணையமும் கூறியுள்ளது. தற்போது தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் டிசம்பர் மாத இறுதிக்குள்  தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பார்கள் என்று பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வாய்ப்புகள் குறைவு. உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும்.
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் நல்லாட்சி தொடரும். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய சரிவை அடைந்துவிட்டோம். தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை பரப்பியது. அதை வைத்து வெற்றி பெற்றது. அவையெல்லாம் பொய்யான வாக்குறுதிகள் என்பதை மக்களிடம் எடுத்து  சொன்னோம். அது வேலூர் நாடாளுமன்றத் தேர்தலிலேயே எதிரொலித்தது. அந்தத் தேர்தலில் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றது. அது திமுகவுக்கு பெரிய வெற்றியே கிடையாது.


ஆனால், தற்போது நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. நாங்குநேரியில் 33 ஆயிரம் வாக்குகள், விக்கிரவாண்டியில் 44 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இதுதான் மிகப் பெரிய வெற்றி. எனவே,  உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்” என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

click me!