உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் பாமக கூட்டணி... அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Oct 30, 2019, 10:31 PM IST
Highlights

குழந்தை சுர்ஜித் உயிரிழந்த விவகாரத்தில் பேரிடர் ஆணையம் விதிகளை ஒதுக்கி நவீன இயந்திரங்களை உருவாக்க வேண்டும்.  ஆழ்துளைக் கிணறுகளை மூட பல தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகளை சரியாக மூடி பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் மருதாலம் கிராமத்தில் பாமக சார்பில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஆழ்துளை கிணறில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.


 “குழந்தை சுர்ஜித் உயிரிழந்த விவகாரத்தில் பேரிடர் ஆணையம் விதிகளை ஒதுக்கி நவீன இயந்திரங்களை உருவாக்க வேண்டும்.  ஆழ்துளைக் கிணறுகளை மூட பல தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகளை சரியாக மூடி பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். பாமகவை பொறுத்தவரை நீட் தேர்வே தேவையற்றது என்பதுதான் நிலைப்பாடு. தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மழைநீரைச் சேமிக்க அனைத்து திட்டங்களையும் அரசிடம் எடுத்துரைத்துள்ளேன். 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை கட்டும் விவகாரம், மீத்தேன் திட்டம் உள்பட தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து குரல் எழுப்பப்படும். உள்ளாட்சி தேர்தல் 2 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

click me!