பாஜக பற்றி புட்டு புட்டு வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...! இவருக்கு இப்படி ஒரு சவாலா..? சூடு பிடிக்கும் அரசியல்..!

By thenmozhi gFirst Published Nov 11, 2018, 4:17 PM IST
Highlights

கமல் தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து விட்டு பேசட்டும். பிக் பாஸ் போல் அரசியல் களத்திலும் மீசையை முறுக்கி விட்டு நடத்த பார்க்கிறார். அது எடுபடாது என்றார் ராஜேந்திர பாலாஜி. 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலுக்கு பல்வேறு சவாலான கேள்விகளை முன் வைத்தார்.அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலை வீசவில்லை, வலைதான் வீசுகிறது. 

பாஜகவுடன் யார்தான் கூட்டணி வைக்கவில்லை? ஏற்கனவே அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இருந்துள்ளது தெரியாதா என்ன..? அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக  வியூகங்களை முதல்வர் நடத்தி வருகிறார். விரைவில் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி பலமான கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெரும். 

கமல் தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து விட்டு பேசட்டும். பிக் பாஸ் போல் அரசியல் களத்திலும் மீசையை முறுக்கி விட்டு நடத்த பார்க்கிறார். அது எடுபடாது என்றார் ராஜேந்திர பாலாஜி. இந்த 2 வருடம் மட்டும் அ.தி.மு.க. ஆட்சி அல்ல. 200 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சி தொடரும் என்றும் நம்பிக்கையுடன் பேசினார்.

  

சந்திரபாபு நாயுடு தமிழகம் வருகை பற்றியும் திமுக உடனான கூட்டணி பேச்சு வார்த்தை பற்றியும் பேசிய ராஜேந்திர பாலாஜி, மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி ஓட்டுக்கேட்டவர் சந்திர பாபு நாயுடு....இப்ப, திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமராக வாய்ப்பு உள்ளது என்கிறார். சந்தர்ப்பம் கிடைத்தால் சந்தர்ப்பவாதிகளாக செயல்படுகிறார்கள் சிலர் என்றும் பேசினார் ராஜேந்திர பாலாஜி. 

மேலும், பாஜகவால் நாட்டில் இன கலவரமோ, மத கலவரமோ ஏற்பட்டதாகவோ தெரியவில்லை. மத நல்லிணக்க ஆட்சிதான் மத்தியில் நடக்கிறது என ராஜேந்திர பாலாஜி, பாஜவிற்கு பாசிட்டிவா பேசி உள்ளார்.

click me!