எடப்பாடி பளார்..! 2 கேள்விகள் தான்... ஆடிப்போன விஜய் முருகதாஸ்..!

Published : Nov 11, 2018, 01:56 PM IST
எடப்பாடி பளார்..! 2 கேள்விகள் தான்... ஆடிப்போன விஜய் முருகதாஸ்..!

சுருக்கம்

 சைக்கிள் கேப் நேரத்தில் இரண்டே கருத்தை பேசிய முதல்வர், இலவசம் வேண்டாம் என்றால் கல்வியும் விலை இல்லாமல் தான் தருகிறோம் அதனால் படிக்காமல் இருந்து விட முடியுமா? அவ்வளவு ஏன் சர்கார் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களின் உறவினர்கள் கூட அரசின் விலையில்லா பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என பளாரென கேட்டு விட்டார்.

விஜய் நடித்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படம் ஆளும் அதிமுக அரசை விமர்சனம் செய்வதாக உள்ளது என கூறி அதிமுகவினர் மேற்கொண்ட போராட்டத்தில் அந்த படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்கியது சென்சார் போர்டு. 

அதற்கு பின், தமிழக அரசால் கொடுக்கப்பட்ட இலவசங்கள் எங்களுக்கு வேண்டாம் என விஜய் ரசிகர்களில் ஒரு சிலர் தங்கள் வீட்டில் இருந்த இலவச பொருட்களான டிவி, பேன் என இருந்ததை ஆர்வ கோளாறில் தூக்கிப்போட்டு உடைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தனர்.

  

அதாவது இலவசங்கள் எதற்கு என, அரசு கொடுத்த பல பொருட்களை நெருப்பில் போட்டு எரிப்பது போன்ற சர்ச்சை காட்சியை தான் நீக்க வேண்டும் என அதிமுகவினர் கொந்தளித்தனர். அப்படி என்றால் இலவச படிப்பும் அரசு தானே கொடுக்கிறது... இந்த ஒரு விஷயம் போதாதா என்ன அதிமுகவிற்கு ...பதிலடி கொடுக்க..!  

இது தொடர்பாக சைக்கிள் கேப் நேரத்தில் இரண்டே கருத்தை பேசிய முதல்வர், இலவசம் வேண்டாம் என்றால் கல்வியும் விலை இல்லாமல் தான் தருகிறோம் அதனால் படிக்காமல் இருந்து விட முடியுமா? அவ்வளவு ஏன் சர்கார் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களின் உறவினர்கள் கூட அரசின் விலையில்லா பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என பளாரென கேட்டு விட்டார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்