’நான் தமிழன்யா... கோட்டு சூட்டெல்லாம் ஒத்து வராது..!’ அமெரிக்காவில் எடப்பாடிக்கு எதிராக ரவுசுகாட்டும் ராஜேந்திரபாலாஜி..!

By Thiraviaraj RMFirst Published Sep 4, 2019, 11:21 AM IST
Highlights

தமிழக முதல்வரும், அமைச்சர்களும் வெளிநாடுகளில் கோட் சூட்டு போட்டு கெத்துக்காட்டுவதால் தமிழகத்தில் கோட்டும் சூட்டும் இப்போது பேசுபொருளாகி வருகிறது. 

தமிழக முதல்வரும், அமைச்சர்களும் வெளிநாடுகளில் கோட் சூட்டு போட்டு கெத்துக்காட்டுவதால் தமிழகத்தில் கோட்டும் சூட்டும் இப்போது பேசுபொருளாகி வருகிறது. 

லண்டனில் கோர்ட், சூட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலம் வந்த புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. அமைச்சர் விஜயபாஸ்கரும் கோட், சூட்டில் கலக்கினார். எம்.சி.சம்பத் பேண்ட், சர்ட், டீசர்ட் அணிந்திருந்தார். பின்லாந்து சென்ற அமைச்சர் செங்கோட்டையன் கோட்டு சட்டையில் அசத்தி வருகிறார்.  

இதனையடுத்து அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்று எடப்பாடியுடன் கலந்து கொண்டனர். ஆனால் ஆர்.பி.உதயகுமார் மட்டுமே கோட்டு சூட்டு அணிந்து எடப்பாடியுன வலம் வந்தார்.  ராஜேந்திர பாலாஜி எப்போதும் போல அதிமுக கரை வேட்டி, வெள்ளை முழுக்கை சட்டையை மடித்துவிட்டப்படி இருந்தார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலும் வேட்டி, சட்டையிலேயே வலம் வந்தார். நயாகரா நீர்வீழ்ச்சியை ரசித்து பார்த்த அவர், அப்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். 

ராஜேந்திர பாலாஜியிடன் நீங்கள் ஏன் கோட்டு சட்டை போடவில்லை எனக் கேட்டதற்கு, ’’நான் தமிழன்யா, வேட்டி சட்டை தான் கட்டுவேன். நமக்கு இந்த கோட்டு சூட்டு எல்லாம் ஒத்து வராது’’ என்று கூறி இருக்கிறார். ஒரே ஒரு நாளைக்காவது கோட், சூட் போடுங்க. அப்படி இல்லன்னா பேண்ட், சர்ட் போடுங்க’’ என உடன் சென்றுள்ள அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜியை வற்புறுத்தி வருகிறார்களாம். ஆனால், வேண்டவே வேண்டாம் என அடம்பிடித்து வருகிறாராம் ராஜேந்திர பாலாஜி. இதன் மூலம் அமெரிக்காவில் ராஜேந்திர பாலாஜி தனியொருவனாய் மாறி அமெரிக்கர்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்து வருகிறார். 

click me!