தமிழக அமைச்சர்கள் நயாகரா நீர்வீழ்ச்சி அருகில்... மக்களோ வெறும் காலிக்குடங்களோடு...முகநூலில் கொந்தளிக்கும் பாலபாரதி...

Published : Sep 04, 2019, 10:53 AM ISTUpdated : Sep 04, 2019, 11:01 AM IST
தமிழக அமைச்சர்கள் நயாகரா நீர்வீழ்ச்சி அருகில்... மக்களோ வெறும் காலிக்குடங்களோடு...முகநூலில் கொந்தளிக்கும் பாலபாரதி...

சுருக்கம்

முதல் அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணம் பலத்த சர்ச்சைக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ள நிலையில் ’அமைச்சர்கள் புகைப்படமெல்லாம் பார்த்தால் இப்பயணத்தின்நோக்கம் சுற்றுலா போல்தான் தெரிகிறது. சில லட்சம்கோடி கடன் சுமையுள்ள தமிழ் நாடரசு மக்கள்பணத்தை வீணடிக்கிறதோ எனத்தோன்றுகிறது’என்று தனது முகநூல் பக்கத்தில் கொந்தளித்திருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏவும், கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினருமான கே.பாலபாரதி.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,...குடிநீர்பஞ்சம் .தொழில்கள் நலிவு. மலைபோல் குவிந்துகிடக்கின்றன கஷ்டங்கள். ஆனால் அமைச்சர்களோ மக்கள்வரிப்பணத்தை செலவுசெய்து வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இப்பயணத்தின்நோக்கம் தமிழ்நாட்டின் நலன்தான் என்றால் இத்தனை அமைச்சர்கள் செல்லவேண்டுமா? அமைச்சர்கள் புகைப்படமெல்லாம் பார்த்தால் இப்பயணத்தின்நோக்கம் சுற்றுலா போல்தான் தெரிகிறது. சிலலட்சம்கோடி கடன்சுமையுள்ள தமிழ்நாடரசு மக்கள்பணத்தை வீணடிக்கிறதோ எனத்தோன்றுகிறது.

அதிமுக ஆட்சியில் கடந்தகாலங்களில் அரசு சார்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அலுவலர்கள்குழு மற்றமாநிலங்கள்சென்று ஆய்வுப்பயணம்மேற்கொள்ளக்கூட முதலமைச்சரிடமிருந்து அத்தனை எளிதில் ஒப்புதல் கிடைக்காது. ஐந்தாண்டுகளில் இரண்டுமுறைகூட அரசுகுழுக்கள் பயணம் மேற்கொண்டதில்லை என்பது என் நினைவு.அமைச்சர்கள் வெளிநாடு பயணமெல்லாம் அரிதாகவே நிகழ்ந்தது.அல்லது நிகழவில்லை. இப்போது அமைச்சர்கள் நயாகரா நீர்வீழ்ச்சி அருகில் நிற்க மக்களோ வெறும் காலிக்குடங்களோடு தமிழ்நாட்டின் வீதிகளில் நிற்கிறார்கள்.

இது குறித்து நாளேடுகள் ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக செய்திகள் பகிர்வது ஒட்டுமொத்த சனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது.அவர்சூட்டுப்போட்டார். இவர் வேட்டி சட்டையை லாண்டரியில் போட்டார்..!இதுதான் இன்றைய அரசியல் என்று எழுதியிருக்கிறார் பாலபாரதி.

PREV
click me!

Recommended Stories

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!
ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!