தமிழகத்தில் மது விற்பனை நிறுத்த முடியாததிற்கு காரணம் "இதுதானாம்"...! அமைச்சர் பதிலால் வாயடைத்து போன பொதுமக்கள்..!

By thenmozhi gFirst Published Nov 11, 2018, 6:02 PM IST
Highlights

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பின் போது சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் ஸ்டாலின் சதிப்பு பற்றியும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்.
 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பின் போது சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் ஸ்டாலின் சதிப்பு பற்றியும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்.
 
அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமராக கூடிய தகுதி உடையவர் என்று, சதிரபாபு நாயுடு கூறி உள்ளார். இதற்கு  முன்னதாக மோடி பிரதமராக வேண்டும் என ஓடி ஓடி ஓட்டு கேட்டவர் அவர். மத்திய ஆட்சியில் பெரிய அளவில் எந்த ஒரு குற்றமும் நடக்கவில்லை....குறைகளும் இல்லை..மத்தியில் ஆட்சி  சிறப்பாகவே உள்ளது என்றார்.

மேலும், இந்த இரண்டு ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் அதிமுக தான்  தமிழகத்தில் நிலையான வெற்றியுடன் ஆட்சி செய்யும் என்றும் அவர் பேசினார்.மேலும் கமலை பற்றி பேசும் போது, மாநில அரசை குறை சொல்கிறார் கமல்....அவர் முதில் ஒரு இடத்தில் நின்று ஜெயிக்கட்டும் பிறகு அவர் பேசட்டும்...பாஜக உடன் யார்தான் கூட்டணி அமைக்க வில்லை..? அதிமுக , திமுக ஏற்கனவே கூட்டணி இருந்த கட்சி தானே....எனவே புதுசா விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம்  இல்லை.

இது என்ன பிக் பாஸ் நிகழ்ச்சியா...? மீசையை முறுக்கிவிட்டு ஆட்சி நடத்த....அது வேறு இது வேறு..என கடுமையாக தாக்கி பேசினார்...பின்னர் கடைசியாக, மது விற்பனை பற்றி தெரிவிக்கும் போது, மது விற்பனையை நிறுத்தினால் பாண்டிச்சேரிக்கோ, கர்நாடகத்திற்கோ நம்ம குடிமகன்கள் சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள்.

அவர்களுக்கு தேவையான மது இங்கேயே கிடைப்பது எவ்வளவோ மேல் என்பதனை உணர்த்தும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்

click me!