அ.தி.மு.க.வில் யாரெல்லாம் ’மஞ்சள் பை’தூக்கியவர்கள்?... விரட்டி விரட்டி வெளுத்துக்கட்டும் தினகரன் அணி

By vinoth kumarFirst Published Nov 11, 2018, 5:21 PM IST
Highlights

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி’ என்பதுபோல், பெரும் அரசியல் ஆளுமையான கருணாநிதியை எந்த வார்த்தையை சொல்லி அ.தி.மு.க. அசிங்கப்படுத்தியதோ, இன்று அதே வார்த்தை அக்கட்சியின் பெரிய மனிதர்களைக் குத்திக் கிழிப்பதுதான் விதி செய்யும் சதியே! அதுவும், அதே அ.தி.மு.க.வில் கோலோச்சியவர்களே இந்த ஆயுதத்தை கையில் எடுத்திருப்பதுதான் ஹைலைட்டே.

தமிழக சட்டமன்றம் எத்தனையோ களேபரங்களைக் கண்டிருக்கிறது. அதில் கருணாநிதி - ஜெயலலிதா இருவரும் எதிரெதிர் புள்ளிகளாக அமர்ந்த காலங்களில் நடந்தவைதான் நொடிக்கு நொடி ஆக்ரோஷமானவை.  

கருணாநியை குளிரவைக்கும் பொருட்டு அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதாவை மோசமாக திட்டுவதும், ஜெ.,வை குஷிப்படுத்தும் பொருட்டு அவர் கட்சியின் நிர்வாகிகள் கருணாநிதியை மிக மிக மோசமாக திட்டுவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தது. அப்படியான நேரங்களில் இரு தரப்பும் பரிமாறிக் கொள்ளும் சில வார்த்தைகள், காலம் கடந்தும் அரசியலில் பற்றி எரியக்கூடியவை. அவற்றுள் ஒன்றுதான் ‘மஞ்சள் பை’.

 

மாஜி அமைச்சர் வளர்மதி, சட்டமன்றத்தில் ஒரு முறை கருணாநிதையை ‘மஞ்சள்  பையை தூக்கிக் கொண்டு கள்ள ரயிலேறி சென்னைக்கு பிழைக்க வந்தார்’! என்று சொல்லிவிட்டார். களேபரப்பட்டுவிட்டது தமிழக அரசியல். அதோடு முடியவில்லை அந்த விமர்சனம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கருணாநிதியை அந்த வார்த்தையை சொல்லித்தான் குத்திக் குத்திக் கிழித்தது அ.தி.மு.க.வின் கத்தி. 

ஆனால் ’கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி’ என்பதுபோல், பெரும் அரசியல் ஆளுமையான கருணாநிதியை எந்த வார்த்தையை சொல்லி அ.தி.மு.க. அசிங்கப்படுத்தியதோ, இன்று அதே வார்த்தை அக்கட்சியின் பெரிய மனிதர்களைக் குத்திக் கிழிப்பதுதான் விதி செய்யும் சதியே! அதுவும், அதே அ.தி.மு.க.வில் கோலோச்சியவர்களே இந்த ஆயுதத்தை கையில் எடுத்திருப்பதுதான் ஹைலைட்டே. 

ஆம், மின்சார துறை அமைச்சர்  தங்கமணியை இந்த வார்த்தையை சொல்லித்தான் சீண்டி, சிதறவிட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. ”முன்பு சேலம் செல்வகணபதிக்கு மஞ்சள் பை தூக்கிக் கொண்டிருந்தவர் தான் இந்த தங்கமணி. இப்போது எடப்பாடிக்கு மஞ்சள் பை தூக்கிக் கொண்டிருக்கிறார். காரியம் நடக்க வேண்டுமானால் எதையும் செய்வார்.” என்று அவரை பிரித்து எடுத்திருக்கிறார் செந்தில். 

இதே கரூரில் வைத்து ”செந்தில்பாலாஜி அமைச்சர், மாவட்ட செயலாளராக இருந்தபோது அவருக்கு மஞ்சள் பை தூக்கியபடி பின்னால் திரிந்தவர்தான் இன்று வெத்து வாய் பேசும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.” என்று தினகரனே அந்த வார்த்தையை பயன்படுத்தியதை இந்த இடத்தில் நினைவு கூற வேண்டியது கடமையல்லவா! ஒரு காலத்தில் தங்கள் தலைவரை சீண்டிய வார்த்தை இன்று அவர்களையே திருப்பித் தாக்கி அசிங்கப்படுத்துவதை கண்டு மகிழ்வில் இருக்கிறார்கள் தி.மு.க.வினர்.

click me!