ரஜினிகாந்த் எதையும் யோசித்து செய்யக் கூடியவர் எனவும் அவர் அரசியல் முடிவை அறிவித்த பிறகே அது பற்றி கருத்து கூற முடியும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வந்தாலும் எம்.ஜி.ஆரைப்போல் மக்கள் சல்வாக்கு யாருக்கும் கிடைத்திட வாய்ப்பில்லை எனவும் சினிமாவைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கு அடுத்து ரஜினிக்கு நான் ரசிகன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியின் வாயிலாக தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த மே மாதம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத்தொடர்ந்து 2ம் கட்டமாக தனது ரசிகர்களை இம்மாதம் இறுதி வரை அவர் சந்தித்து வருகிறார். மேலும் தனது அரசியல் நிலைபாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் எதையும் யோசித்து செய்யக் கூடியவர் எனவும் அவர் அரசியல் முடிவை அறிவித்த பிறகே அது பற்றி கருத்து கூற முடியும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வந்தாலும் எம்.ஜி.ஆரைப்போல் மக்கள் சல்வாக்கு யாருக்கும் கிடைத்திட வாய்ப்பில்லை எனவும் சினிமாவைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கு அடுத்து ரஜினிக்கு நான் ரசிகன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.