எந்த மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை?... அமைச்சர் பொன்முடி அதிரடி விளக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 12, 2021, 12:41 PM IST
Highlights

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவர் சேர்க்கை குறித்த விளக்கமளித்துள்ளார்

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என்ற குழப்பம் பெற்றோர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவர் சேர்க்கை குறித்த விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கைக்கு 9ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

மேலும், பாலிடெக்னிக் மாணவர்கள் மொத்தமுள்ள 8 செமஸ்டர் தேர்வுகளில் 6 தேர்வுகளை தொடர்ந்து எழுதலாம், இடைவெளி விட்டு 7,8 செமஸ்டர் தேர்வுகளை மீண்டும் எழுதலாம் என்ற முறை நீக்கப்படுகிறது என்றும், அதற்கு பதிலாக பாலிடெக்னிக் மாணவர்கள் 8 செமஸ்டர் தேர்வுகளையும் தொடர்ந்து எழுதலாம் என்றும் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மீண்டும் செமஸ்டர் தேர்வை எழுத விரும்பினால், எந்த பேப்பரை எழுத விரும்புகிறார்களோ அதற்கு மட்டும் தலா 65 ரூபாய் வீதம் கட்டணமாக செலுத்தி தேர்வு எழுதலாம் என தெரிவித்துள்ளார். 

12ம் வகுப்பு மதிப்பெண்களுக்குப் பதிலாக எதை வைத்து இன்ஜினியரிங், கலை கல்லூரி அட்மிஷன்களை நடத்துவது என ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் கூறினார். மேலும் பெரியார், காமராஜர், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் முறைகேடு பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

click me!