தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி.. இனி யாரிடமும் கையேந்த தேவையில்லை.. அரசு வெளியிட்ட அதிரடி ஆணை..

By Ezhilarasan BabuFirst Published Jun 12, 2021, 12:30 PM IST
Highlights

தமிழகத்தில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை, மருத்துவ ஆக்சிஜன் முதலீடு செய்யும் உற்பத்தியாளருக்கு 30% மூலதன மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் அறிவித்தது.  

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்காக ஐனாக்ஸ் மற்றும் சி.வி.ஐ டிரேட் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை, மருத்துவ ஆக்சிஜன் முதலீடு செய்யும் உற்பத்தியாளருக்கு 30% மூலதன மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க ஐனாக்ஸ் ஏர் பிராடக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சி.வி.ஐ.டிரேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உற்பத்தி மேற்கொள்ள விண்ணப்பித்தனர். 

அவர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 30% மூலதன மானியம் வழங்கப்பட உள்ளது. அதேபோல், தமிழ்நாட்டு வழிக்காட்டி நிறுவனம் மூலம் கட்டணம் இல்லாமல் ஒற்றை சாலர முறையில் அனுமதி வழங்குவதோடு, சிப்காட் மூலம் நிலம் ஒதுக்கி தரப்படும் எனவும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முத்திரை வரியில் 50% சலுகை, மின்சாரத்திற்கு  5 ஆண்டுகள் வரிவிலக்கு அளித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

click me!