'மீ டூ' என்பது வக்கிர புத்தியுள்ள பெண்களின் எண்ணம் !! போட்டுத் தாக்கிய பொன்னார் !!

By Selvanayagam PFirst Published Oct 17, 2018, 11:18 PM IST
Highlights

''மீடூ மூவ்மெண்ட் என்பது  வக்கிர புத்தியுடைய பெண்களின் எண்ணம் என்றும்,  இதேபோல ஆண்கள் ஆரம்பித்தால் என்னவாகும்?  என கேள்வி எழுப்பியுள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அப்படி நிலை வந்தால் நமது வீட்டு பெண்கள் நடமாட முடியுமா?'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்டதுதான்  'மீ டூ' ஹேஷ்டேக். இது  உலகம் முழுவதும் பரவி தற்போது தமிழ் திரையுலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்த மீடூ ஹேஷ்டேக்கில்  ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலம் மீது குற்றம் சாட்டப்பட்டு பெண்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அடுத்து நமது பெயரையும் மீ டூ வில் அம்பலப்படுத்தி விடுவார்களோ என தப்பு செய்த பிரபலங்கள் அஞ்சி நடுங்கி வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், 'மீடூ என்பது வக்கிர புத்தியுடைய பெண்களின் எண்ணம். இதேபோல ஆண்கள் ஆரம்பித்தால் என்னவாகும்? நமது வீட்டு பெண்கள் நடமாட முடியுமா?''  என கேள்வி எழுப்பியுள்ளார்.

மீ டூ மூவ்மெண்ட்டில் பாடகி சின்மயி தொடர்ந்து கவிஞர் வைரமுத்து மீது  குற்றச்சாட்டை கூறி வருகிறார். சின்மயிக்கு தமிழக பாஜக தலைவர்  தமிழிசை ஆதரவள்ளித்து வருகிறார்.

ஏற்கனவே  சின்மயி, பாஜக ஆதரவாளர் என்று கூறப்பட்டாலும், மீடூவை ஆரம்பம் முதலே பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்த்து வருகிறார்.  மீ டூ குறித்து மத்திய அமைச்ச்ர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து பலர் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஒரு சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து பேசிய  பொன்.ராதாகிருஷ்ணன், 'சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது, அவர்களுடைய நம்பிக்கை தொடர்பான விஷயம் என்றும், சபரிமலைக்கென்று உள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்

click me!