அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூட்டத்தில் கல்வீச்சு! பரபரப்பு...

 
Published : Oct 23, 2017, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூட்டத்தில் கல்வீச்சு! பரபரப்பு...

சுருக்கம்

Minister O.S. Maniyan - Sensation

அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்ட கூட்டத்தில் கல் வீச்சு நடைபெற்றதால், பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டு அமைச்சர் அங்கிருந்து கிளம்பினார். அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், அதிமுக நகர செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த
கூட்டத்தில் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து
கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச துவங்கினார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், மேடையின் முன்பு கற்களை வீசினர்.
அமைச்சர் பேசும்போது கற்கள் வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனை அடுத்து, அமைச்சர் ஓ.எஸ். மணியன் தனது பேச்சை முடித்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!