சாபத்தில் இருந்து வெளியேற ஜல்லிக்கட்டு நடத்தும் அமைச்சர்... பத்து அமைச்சர்கள், இருபது எம்.எல்.ஏ.க்கள் சாட்சி!

By Vishnu PriyaFirst Published Jan 19, 2019, 10:47 AM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம்தான் சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்த ஊர். இங்குள்ள விராலிமலை அம்மன்குளம் திடலில் வரும் ஞாயிற்றுக் கிழமையன்று மாபெரும் ஜல்லிக்கட்டு ஒன்றை நடத்தி, அதை கின்னஸ் சாதனையாக மாற்றிட பெரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அமைச்சர்.

குட்கா ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கரே பதவி விலகு!...என்று ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், தான் வளர்த்துவரும் ‘கொம்பன் 2’வுடன் கின்னஸ் சாதனைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் அமைச்சர். 
விஷயம் இதுதான்...

புதுக்கோட்டை மாவட்டம்தான் சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்த ஊர். இங்குள்ள விராலிமலை அம்மன்குளம் திடலில் வரும் ஞாயிற்றுக் கிழமையன்று மாபெரும் ஜல்லிக்கட்டு ஒன்றை நடத்தி, அதை கின்னஸ் சாதனையாக மாற்றிட பெரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்  இதில் அதி மும்முரமாக இருக்கும் அமைச்சருக்கு எதிர்கட்சிகளின் எந்த கூக்குரலும் காதிலேயே விழவில்லை. விராலிமலை ஜல்லிக்கட்டின் ஹைலைட் அம்சங்கள்...
 

  

ஹைலைட் அம்சங்கள்...

* இந்த ஜல்லிக்கட்டில் ஆயிரத்து ஐநூறு முதல் ரெண்டாயிரம் காளைகள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. 

* ஐநூறு மாடு பிடி வீரர்கள் களமிறங்குகிறார்கள்.

* ஒருலட்சம் பார்வையாளர்கள் பங்கேற்கிறார்கள்.

* உட்கார்ந்து பார்க்க மட்டும் சுமார் பனிரெண்டாயிரம் பேரை தாங்கும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

* இருபத்தைந்து நாட்களாக இந்த ஜல்லிக்கட்டுக்கான பணிகள் நடந்து வருகிறது. 

* தினமும் அமைச்சர் அந்த ஸ்பாட்டுக்கு வந்து பணிகளை முடுக்கிவிடுகிறார். 

* இருபது வருடங்களாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்துவருகிறார் டாக்டர் விஜயபாஸ்கர்.

* கடந்த ஆண்டில் இவருடைய ‘கொம்பன்’ எனும் ராசியான காளை ஜல்லிக்கட்டில் இறந்துவிட்டது. இதனால் சில நாட்கள் மனம் நொந்து இருந்தவர், இப்போது மீண்டும் ஒரு காளை வாங்கி அதற்கு கொம்பன் -2 என பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்த காளை இந்த ஜல்லிக்கட்டில் பிரதானமாக பங்கேற்கும். 

*    இந்த விழாவில் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களும், 60 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்கிறார்களாம்.

* இந்த ஜல்லிக்கட்டு நடக்கும் தொகையில் பெரிய பகுதியை அமைச்சரே தருகிறாராம். 

* கின்னஸ் நடுவர்களாக அமெரிக்காவில் இருந்து மார்க்,மெலனீ எனும் இருவர் வருகிறார்கள். எல்லாம் சரி, இம்புட்டு கஷ்டப்பட்டு ஏன் அமைச்சர் இந்த ஜல்லிக்கட்டை நடத்துறாராம்?.... “உலகம் புகழ ஒரு ஜல்லிக்கட்டு நடத்தினால், உங்களை சுற்றி சுற்றி வருகிற கைது, ரெய்டு, பதவியிழப்பு பீடையில இருந்து  நீங்க வெளியே வந்துடுவீங்க!”ன்னு மிகப்பெரிய ஜோசியர்  சொன்னதுதான் காரணமாம். அப்படி போடு!

click me!