கட்சி தொடங்குவதற்கு மக்களிடம் நிதி கேட்பதா என நடிகர் கமலுக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் கமலஹாசன் கடந்த சில தினங்களாக கட்சி தமிழகத்தில் சிஷ்டம் சரியில்லை என கூறி தமிழக அமைச்சர்களின் வாயை பிடிங்கினார். இதனால் அமைச்சர்கள் அனைவரும் வழக்கம்போல் சரமாரியாக கமலை வசைபாடினார். இதைதொடர்ந்து அரசியல் நோக்கில் கமல் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பிரபலமானார். அமைச்சர்கள் அதோடு விடாமல் கமல் அரசியலுக்கு வந்துவிட்டு பிறகு கருத்து தெரிவிக்கட்டும் என உசுப்பிவிட்டனர். இதுதான் நேரம் என கருதி அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் எனவும் கட்சியை தொடங்க ரசிகர்கள் நிதி தருவார்கள் எனவும் தெரிவித்தார் கமல். இதைதொடர்ந்து இன்று கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர் நற்பணி இயக்கத்தின் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தீயவை நடக்காமல் தடுப்பதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார். மேலும், யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம், மக்கள் ஆதரவு யாருக்கு என்பதுதான் முக்கியம் என்றும், கட்சி தொடங்குவதற்கு மக்களிடம் நிதி கேட்பதா என நடிகர் கமலுக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.