நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இசக்கி முத்துவை மறுமலர்ச்சி திராவிட கழக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி, அட்சயா. இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று தீக்குளித்தனர். கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.70% மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி, அட்சயா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார். இந்நிலையில், தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இசக்கி முத்துவை மறுமலர்ச்சி திராவிட கழக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.