ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த வருமான வரித்துறை... அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்மந்தி வீட்டில் சோதனை..!

By vinoth kumarFirst Published Mar 27, 2021, 7:34 PM IST
Highlights

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்மந்தி இளங்கோவன் நடத்தும் பள்ளியில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்மந்தி இளங்கோவன் நடத்தும் பள்ளியில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. சமீபத்தில் கூட திமுக திருவண்ணாமலை வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. இதுகுறித்து திமுக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். 

இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் எம்.சி. சம்பத் அவர்களின் சம்பந்தி இளங்கோவன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினருக்கு சொந்தமான பள்ளியில் வருமானவரித்துறையினர், தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் காவல்துறையினர் அனைவரும் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். 

இதுவரை எதிர்க்கட்சி பிரமுகர்களின் வீடுகளில் மட்டுமே வருமான வரி சோதனை நடந்த நிலையில் தற்போது ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரது உறவினர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!