சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பதில் அளிக்கும் பேது ஓடி ஒளிந்துகொள்பவர் தான் எடப்பாடி - அமைச்சர் விமர்சனம்

By Velmurugan s  |  First Published Apr 27, 2023, 7:21 PM IST

சட்ட பேரவையில் அமைச்சர்கள் பதிலளிக்கும் போது ஓடி ஒளிந்து கொள்பவர் தான் எடப்பாடி பழனிசாமி அவர் அமித்ஷாவை சந்தித்திருப்பது அரசியல் நாடகம் என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தமிழக அரசின் தொழில் மற்றும் வனிகத்துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழில் கூட்டுறவு சங்கம் சார்பில் தமிழகத்திலே குறைந்த விலையான  அடைக்கப்பட்ட தண்ணிர் லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் கோ ஆப் அக்வா விற்பனை நிலையத்தை துவங்கி வைத்த அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார், 

அப்போது அவர் கூறும் போது, சட்ட பேரவையில் அமைச்சர்கள் பதிலளிக்கும் போது ஓடி ஒளிந்து கொள்பவர் தான் எடப்பாடி பழனிசாமி. அவர் சட்டம் ஒழுங்கை பற்றி பேசுகிறார். தேசிய கணக்கீட்டை பார்க்கும் போது தமிழகத்தில் குற்றங்கள் மிக மிக குறைவு, இந்த நேரத்தில் இவர் அமித்ஷாவை சந்தித்திருப்பது அரசியல் நாடகம். சட்ட பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்டு மக்களுக்கு எதிர்க்கட்சி செய்யவேண்டியவைகளை செய்யாமல் இருந்ததை மக்களிடம் மறைக்கவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

Latest Videos

தமிழ்நாட்டிலேயெ மிகப்பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் மைதானம் தான் - அன்புமணி பேச்சு

தமிழகத்தில் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்வது இயல்பான ஒன்று தான். அதே வேளையில் வி  ஏ ஓ கொலை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்தது மட்டும் இன்றி அந்த குடும்பத்தையும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து பாதுகாத்து உள்ளார் முதல் தமிழகத்தில் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மட்டும் இன்றி  குற்றவாளிவாளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி நடவடிக்கை எடுத்துவருகிறார் முதல்வர்.

வேங்கைவயல் விவகாரம்; மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு

தொடர்ந்து வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை.. சட்டம் நிறைவேற்றிய நிலையில்  தோழமை கட்சிகள் கேட்டு கொண்டதால் முதல்வர் கிடப்பில் போட்டார்..இதற்கு ம் வரும் தேர்தலில் கூட்டணி குறித்தும் முடிச்சி போட வேண்டாம்.என கூறினார்..

click me!