நீங்க இப்படி செய்யலாமா விஜயேந்தர்? அறிவுரை கூறும் மாஃபா!

Asianet News Tamil  
Published : Jan 24, 2018, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
நீங்க இப்படி செய்யலாமா விஜயேந்தர்? அறிவுரை கூறும் மாஃபா!

சுருக்கம்

minister mafa pandiyarajan pressmeet

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தவறான முன்னுதாரணம் என்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.

தமிழ் - சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் பிரோகித், மத்திய அமைச்சர்கள், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நீதிபதிகள், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் - சமஸ்கிருதம் அகாராதியை, ஹெச். ராஜாவின் தந்தையும் மறைந்த பேராசிரியருமான அரிகரன் எழுதியது. இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று
சென்னையில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழா துவங்கியவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். இதன் பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆளுநர் உட்பட அனைவரும் நின்றிருந்த நிலையில், விஜயேந்திரர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.  அவரின் இந்த செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, விஜயேந்திரர், தியானத்தில் இருந்தார் என்று காஞ்சி சங்கர மடம் விளக்கம் அளித்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காந்திய மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியன், மதுரை ஆதீனம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தேசிய கீதத்துக்கு தர வேண்டிய மரியாதையை தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் தர வேண்டும் என்று கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தவறான முன்னுதாரணம் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்து கருத்து கூற மாஃபா பாண்டியராஜன் கருத்து கூற மறுத்து விட்டார்.

PREV
click me!

Recommended Stories

3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?
திமுகவை சரமாரியாக விமர்சித்த ராமதாஸ்.. NDA பக்கம் வண்டியை திருப்பும் ஐயா? ட்விஸ்ட்!