மத்திய அரசுக்கு பயப்படும் தமிழக அரசு அதிகாரிகள்..! அதிமுகவினரை ஒன்று சேர விடாமல் தடுக்கும் பாஜக- கே.என்.நேரு

By Ajmal Khan  |  First Published Oct 31, 2022, 12:57 PM IST

அதிமுக இன்றைக்கு பிளவு பட்டுள்ளது. யார் தலைமை என நீ, நான்  என போட்டியில்  உள்ளனர். எனவே அதிமுக இருக்கும் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருவதாக அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.


திருச்சிக்கு வரும் முதல்வர்

அரசு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர்  4 ஆம் தேதி திருச்சிக்கு வருவதையொட்டி செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் திமுக திருச்சி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.என்.நேரு,  திருச்சி வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திருச்சியில் காகித தொழிற்சாலையை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.  இந்த நிகழ்வுகளுக்கு  பிறகு சென்னை செல்கிறார் என கூறினார். 

Tap to resize

Latest Videos


அதிமுகவில் பிளவு

தமிழ்நாட்டில் திருச்சியில் தான் அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் திமுக வென்றுள்ளது. அதனை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். தமிழக கவர்னர் எதிர்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார். மேலும் பாஜக சேர்ந்தவர்கள் சிறிய தவறுகளை கூட ஊதி பெரிதாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திமுக ஆட்சிக்கு அவர் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.  அதிமுக இன்றைக்கு பிளவு பட்டுள்ளது. யார் தலைமை என நீ, நான்  என போட்டியில்  உள்ளனர். எனவே அதிமுக இருக்கும் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருவதாக கூறினார். 

ஆளுநரை பதவி விலக சொல்லும் கட்சிகள்.! ஆளும் திமுகவின் அடிமைகள்.! ஜால்ரா அடிப்பதை தவிர வேறு என்ன தெரியும்.? பாஜக

40க்கு 40 வெற்றி

இந்த நேரத்தில் நான் வெளிப்படையாக சொல்கிறேன் வெட்கத்தை விட்டு சொல்கிறேன் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள்.  தற்போது திமுக எந்த அளவிற்கு பலமாக உள்ளதோ வருங்காலத்தில் இதோடு இன்னும் பலமாக இருக்க வேண்டும்.  அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களை திமுக கைப்பற்ற வேண்டும் அதற்கு அனைவரும் நாம் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திருச்சி என்ன நினைக்கிறதோ அதுதான் தமிழ்நாட்டின் நடக்கும். திருச்சி சரியாக இருந்தால் தமிழ்நாடு சரியாக இருக்கும். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு சில சில சங்கடங்கள் நிலை வருகிறது.  அவற்றை சரி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும் என கே.என்.நேரு தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

கோவையில் மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்த திட்டம்..? ஆணி, பாஸ்ராஸ் குண்டுகளை காண்பித்து அண்ணாமலை ஆவேசம்

click me!