அமைச்சர் காமராஜிக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை..!! விரைவில் வீடு திரும்புவார்.. மருத்துவமனை அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2021, 11:52 AM IST
Highlights

இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பையும், பணமும் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், சாதாரண ஒரு அறை காற்றில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவே அவருக்குப் போதுமானதாக இருக்கிறது எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் பரவத் தொடங்கிய இந்த வைரசால் நாடு பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். அதேநேரத்தில் சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. புதிய வகை வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பையும், பணமும் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்து வருவோர் தனிமைப் படுத்திக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் விவரம்: 

திரு.ஆர்.காமராஜ் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் RTPCR பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் ஜனவரி 5 ஆம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது சிடி ஸ்கேன் இயல்பான நிலையில் உள்ளது. அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, சாதாரணமாக ஒரு அரை காற்றில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவு அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. வேறு எந்தவிதமான கூடுதல் ஆக்சிஜன் துணையும் அவருக்கு தேவைப்படவில்லை. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். என அதில்  கூறப்பட்டுள்ளது. 

 

click me!